இவ்ளோ சின்ன வயதிலா? சன் டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மகேஸ்வரியின் மரண செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இவ்வளவு சின்ன வயதில் மரணமா என்று ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

metti oli serial actress Uma Maheswari passes away, metti oli serial fame actress Uma Maheswari, சன் டிவி, மெட்டி ஒலி சீரியல், நடிகை உமா மகேஸ்வரி மரணம், actress Uma Maheswari passes away, tamil tv serial news, tamil news, tamil tv news

சன் டியில் 2000களில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் புகழ் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. இவ்வளவு சிறிய வயதில் மரணமா என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் ‘மெட்டி ஒலி’ சீரியல் 2002 முதல் 2005 வரை மூன்று ஆண்டுகள் 811 எபிசோடுகள் ஒளிபரப்பானது. இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கினார். இதில், இயக்குனர் திருமுருகன், டெல்லி குமார், போஸ் வெங்கட், காவேரி, காயத்ரி, சஞ்சீவி, வனஜா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மெட்டி ஒலி சீரியலில் சிதம்பரத்தின் 4-வது மகளாக நடித்தவர்தான் நடிகை உமா மகேஸ்வரி. இந்த சீரியலின் ஹீரோ திருமுருகனுக்கு ஜோடியாக ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மெட்டி ஒலி சீரியலில் உமா மகேஸ்வரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகை உமா மகேஸ்வரி மெட்டி ஒலி சீரியலைத் தொடர்ந்து, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘உன்னை நினைத்து’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதையடுத்து, அவர் ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட உமா மகேஸ்வரி அதற்குப் பிறகு சீரியல்களில் நடிக்கவில்லை

இந்த நிலையில், உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 17) காலமானார். சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமா மகேஸ்வரி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். உமா மகேஸ்வரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி 40 வயதில் உடல்நலக் குறைவால் இறந்ததால் டிவி நடிகர்கள், நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகை உமா மகேஸ்வரியின் மரண செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இவ்வளவு சின்ன வயதில் மரணமா என்று ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Metti oli serial actress uma maheswari passes away

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com