Advertisment

22 ஆண்டுகள் சேலஞ்ச்... மெட்டி ஒலி சீரியல் சகோதரிகள் ரீயூனியன்; மலரும் நினைவுகளில் கரைந்த ரசிகர்கள்

Metti Oli serial sisters reunion: சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்த சகோதரிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட ரீயூனியன் புகைப்படம் ரசிகர்களை மலரும் நினைவுகளில் கரையச் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
mettioli serial reunion

மெட்டி ஒலி - ரீயூனியன் (image courtesy : vanajabharathkumar_official)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத 2 சீரியல்கள் என்றால் அது சித்தி, மெட்டி ஒலி என 2 சீயல்களைக் கூறினால் அது மிகையல்ல. 

Advertisment

“அம்மி அம்மி அம்மி மிதித்து.... அருந்ததி முகம் பார்த்து” என்ற மெட்டி ஒலி சீரியலின் தலைப்பு பாடல் இன்னும் சின்னத்திரை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

2002-ம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குநர் திருமுருகனின் 'மெட்டி ஒலி' சீரியல் குடும்ப உறவுகளையும், சிக்கல்களையும் ஐந்து சகோதரிகளின் வழியாகக் கூறியது. 

மெட்டி ஒலி சீரியல் ஐந்து சகோதரிகளின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமாகக் கூறியது. மெட்டி ஒலி சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் காவேரி, சரோவாக காயத்ரி, லீலாவாக வனஜா, விஜியாக உமா மற்றும் பவானியாக ரேவதிப்ரியா நடித்தனனர். 

இந்த சீரியல் முதல் ஒளிபரப்பு தொடங்கி 22 ஆண்டுகள் கடந்த நிலையில், 22 ஆண்டுகள் சேலஞ்ச் என்று மெட்டி ஒலி சகோதரிகளின் ரீயூனியன் அண்மையில் நடைபெற்றது. இதில் காவேரி, வனஜா மற்றும் காயத்ரி ஆகிய 3 பேர் கொண்டனர். இவர்களின்  தங்கையாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா, கடந்த 2021ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். கடைசி தங்கையாக நடித்த ரேவதி பிரியா கலந்து கொள்ளவில்லை. 

22 ஆண்டுகள் சேலஞ் என்று நடந்த மெட்டி ஒலி சீரியல் சகோதரிகளின் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்டி ஒலி சீரியல் சகோதரிகளின் ரீயூனியன் புகைபடங்களைப் பார்த்த ரசிகர்கள், சீரியலைப் பற்றிய மலரும் நினைவுகளில் கரைந்து உற்சாகம் அடைந்துள்ளனர். 

மெட்டி ஒலி சீரியல் 80 கிட்ஸ், 90 கிட்ஸ் அவர்களின் பெற்றோர்களின் ஒரு மறக்க முடியாத நினைவு. இந்த சீரியலில் நடித்தவர்களுக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம்தான். மெட்டி ஒலி சீரியலில் நடித்த டெல்லி குமார், சாந்தி வில்லியம்ஸ், சேத்தன், போஸ் வெங்கட், சஞ்சீவ், சண்முகசுந்தரி, தீபா ஷங்கர், திருச்செல்வம் என பலருக்கும் மிகப்பெரிய திருப்புமுனை சீரியல் இது.

மெட்டி ஒலி சீரியல் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருந்தது என்றால், அந்த சீரியல் மூன்று முறை தொலைக்காட்சியில் ரீ டெலிகாஸ்ட் செய்யப்படும் அளவுக்கு வரவேற்பு பெற்றிருந்தது. கொரோனா காலத்தில் 'மெட்டி ஒலி' சீரியல் ரீ டெலிகாஸ்ட் செய்த போது, பார்வையாளர்கள் மத்தியில் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த மெட்டி ஒலி சீரியலின் சீசன் 2 வருமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுன் கேட்டு வந்த நிலையில், அண்மையில், மெட்டி ஒலி சீசன் 2 குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இருப்பினும், இயகுனர் திருமுருகன் சீசன் 2 பற்றிய அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

sun tv serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment