Meyaadha Maan Director Rathna Kumar Covid Tamil News : மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானாவர் இயக்குநர் ரத்னகுமார். மேயாத மான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற, தொடர்ந்து அவர் இயக்கிய படம் தான் ஆடை. அமலா பால், விவேக் பிரசன்னா நடிப்பில் ரத்னகுமார் இயக்கிய ஆடை திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
ஆடையின்றி ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ளும் அமலா பாலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தான் ஆடை திரைப்படத்தின் மைய கதைக் கரு. மிகவும் சவாலான இந்த காட்சிகள், நாகரிகமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது, திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற, தமிழ் ரசிகர்களின் சிறப்பான இயக்குநர்கள் வரிசையில் இடம்பெற்றார் ரத்னகுமார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் ரத்னகுமார் குடும்பத்தினரையும் விட்டு வைக்கவில்லை. அவர் குடும்பத்தில், கொரோனா வைரஸின் கொடூரத்தால் குடும்பம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பான உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ரத்னகுமாரின் ட்விட்டர் பதிவில், தனது குடும்பத்தைச் சார்ந்த 15 மாத குழந்தை உள்பட 14 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். ரத்னகுமாரின் அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, அவரின் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை தேரியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து, இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு🙏 🙏
— Rathna kumar (@MrRathna) May 29, 2021
ட்விட்டரில் ரத்னகுமாரின் பதிவினை தொடர்ந்து, அவரின் ரசிகர்களும் நெட்டிசன்களும் வருத்தத்தினையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் இது போல் தொற்று ஏற்படாமல் இருக்கவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளனர். ரத்னகுமாரின் ரசிகர் ஒருவர், ‘கொரேனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது மற்றும் கொரேனா தொற்றுக்கு பின் என்னென்ன உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது போன்ற உங்கள் அனுபவங்களை நேரமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil