அகில இந்திய அண்ணா திராவிட முன்னேதா காசகம் (அஇஅதிமுக) நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் என அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. சினிமாவில், அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள் மூலம் பெரும் புகழ்பெற்ற எம்ஜிஆர் மக்களால் அன்புடன் மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்று அழைக்கப்பட்டார். அவருடைய சினிமா புகழ் பின்னாளில் அவர் கட்சி தொடங்குவதற்கும் அரசியலில் சாதனை படைப்பதற்கு வழிவகுத்தது. தமிழக மக்களால் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை தலைமையில் எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) உறுப்பினரானார். பின்னாட்களில், அதிமுகவை நிறுவினார்.
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
எம்.ஜி.ஆர் 1917 இல் இலங்கையின் கண்டியில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மருதுர் கோபால மேனன். கண்டி நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தனது மூதாதையர் கிராமமான வடவனூர் திரும்பினார். எம்.ஜி.ஆர் தனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வதற்காக ஒரு நாடக குழுவில் சேர்ந்தார். 1936 ஆம் ஆண்டு சதி லீலாவதி திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய பாத்திரத்தில் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துவந்த அவர், 1942 ஆம் ஆண்டு 22 பாடல்களைக் கொண்ட ‘தமிழறியும் பெருமாள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு, மூன்று தசாப்தங்கள் தமிழ் திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தினார்.
அவர் ஒரு நடிகராக போராடிய நாட்களில், எம்.ஜி.ஆர் வறுமையையும் பட்டினியையும் எதிர்கொண்டார். அவருடைய படங்களில் அதே போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். இது நிஜ வாழ்க்கையுடன் உடனடியாக அவரை பிணைத்து வெகுஜன மக்களின் தலைவராக்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.