எம்.ஜி.ஆர் - சந்திரபாபு மோதல் பற்றி காலங்காலமாக பேசப்பட்டு வருகிறது. இடையில் பல தவறான தகவல்களும் உலவுகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று இதயக்கனி யூடியூப் பக்கத்தின்
ஆசிரியர் விஜயன் கூறியுள்ளார்.
சந்திரபாபு சிறந்த நடிகர். பாடகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இருப்பினும் அவரிடைய சில குறைபாடுகளும் இருந்தன. யாரையும் மதிக்காமல் இருந்துள்ளார். மூத்த நடிகர்களை மதிக்காமல் இருந்துள்ளார். உற்சாகம் ஏற்பட்டால் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எம்.ஜி.ஆரை ராமச்சந்திரன் என்று அழைப்பார். தனக்கு மூத்தவர்கள் என்றும் பாராமல் நடந்து கொண்டுள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர்கள் தாம் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் அவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது.
கவலை இல்லாத மனிதன் படம் எடுத்ததில் கண்ணாதாசன் வருத்தப்பட்டார். சந்திரபாபு அந்தப் படத்தில்
கண்ணாதானை மிகவும் துன்புறுத்தியதாக அவரே கூறினார்.
மாடி வீட்டு ஏழை படத்தை சந்திரபாபு தயாரித்து இயக்குகிறார். எம்.ஜி.ஆர்- சாவித்திரி நடித்திருந்தனர்.
எம்.ஜி.ஆர் வைத்து படம் எடுக்கும் போது விநியோகஸ்தர், தயாரிப்பாளர்கள் எளிதில் கிடைத்துவிடுவார்கள். சந்திரபாபு படத்திற்கு பணம் வழங்கி உதவி செய்தவர்களுக்கு அவர் தீங்கு இழைத்துவிட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு பற்றி எதுவும் சொல்லவில்லை. அந்த குடும்பம் பாதிக்கப்படும் என சொல்லவில்லை.
சந்திரபாபு எம்.ஜி.ஆர் பற்றி தவறாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார். எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கையை அழித்து விட்டதாகவும் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. படம் நிறுத்தப்பட்டதற்கு காரணத்தை பொது வெளியில் சொன்னால் அந்த குடும்பம் பாதிக்கப்படும் என எம்.ஜி.ஆர் கடைசி வரை சொல்லவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பம் எம்.ஜி.ஆரிடம் வந்து சந்திரபாபு தங்களுக்கு கெடுதல் செய்ததாக கூறியுள்ளனர்.
எம்.ஜி.ஆர் சந்திரபாபுவை அழைத்து இதுபற்றி கேட்டார். அதற்கு ராமச்சந்திரன் இதில் நீங்கள் தலையிடாதீர்கள். நீங்கள் நடிக்க வந்துள்ளீர்கள். நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன். இதை தாண்டி அட்வெஸ் செய்யாதீர்க்ள். இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு கடுமையாக கோபம் வந்தது. படம் நின்றுவிட்டது. சந்திரபாபு அடுத்தடுத்த படங்களுக்கு கால் ஷுட் கேட்ட போது பதில் இல்லை. சந்திரபாபுவுக்கு வருமானம் குறைந்தது. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை சந்திரபாபு இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. சந்திரபாபு கடுமையாக பாதிக்கப்பட்டார். பொருளாதாரம் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அதிக மது அருந்தினார்.
இதை எம்.ஜி.ஆர் கவனித்தார். சரி அவருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணினார். கண்டதும் காதல், பறக்கும் பாவை உள்ளிட்ட படங்களில் நடிக்க வைத்தார். சந்திரபாபு கொடுத்ததை விட பல மடங்கு சம்பளத்தை சந்திரபாபு கொடுத்தார். அதன் பிறகும் கூட விழிமாலை பத்திரிகையில் எம்.ஜி.ஆர் பற்றி எழுதினார். ஆனால் எம்.ஜி.ஆர் எந்த பதிலும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆர் சகித்துக் கொண்டார். கடைசி வரை எம்.ஜி.ஆர் அந்த குடும்பத்திற்காக எந்த காரணத்தையும் சொல்லவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“