தமிழ் சினிமாவின் லெஜண்டரி நடிகரான எம்.ஜி.ஆர், தன்னுடன் நடிப்பவர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டவர் என்பதை நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் என்றும் மங்காத புகழை உடையவர் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தப்போதும், ஆட்சியில் இருந்தப்போதும் பொதுமக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்தவர் எம்.ஜி.ஆர். இந்தநிலையில், எம்.ஜி.ஆர், தன்னுடன் நடிப்பவர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டவர் என்பதை நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பேட்டியில் வெண்ணிற ஆடை நிர்மலா கூறியதாவது; எம்.ஜி.ஆர் கூட நடித்ததை யாரும் மறக்கமாட்டார்கள். எனக்கும் அப்படி சில அனுபவங்கள் உண்டு. எம்.ஜி.ஆருடன் ரகசிய போலீஸ் படத்தில் நடித்தப்போது, ஒரு நாள் சூட்டிங் லேட் ஆகிடுச்சு. மறுநாள் நான் சூட்டிங்கிற்கு சோரனூரில் இருக்க வேண்டும். ரயில், விமானத்தில் செல்ல முடியாத நிலையால், காரில் செல்ல ஏற்பாடு செய்தார்கள். இதைத் தெரிந்துக் கொண்ட எம்.ஜி.ஆர் சூட்டிங் முடிந்து என்னை கூப்பிட்டு விட்டார்.
Advertisment
Advertisements
நான் போய் நின்னப்போது, என்னுடைய அண்ணாவை அழைத்து விஷயத்தை கேட்டார். காரில் போவது பற்றி சொன்னதும், என் அண்ணாவிடம், உனக்கு புத்தி இருக்கா? ஒரு பொண்ண ராத்திரியில் காரில் அழைச்சிட்டு போவியா? அது பாதுகாப்பானதா? எனக் கேட்டு, தன்னுடைய பாதுகாவலர்களை அழைத்து, துப்பாக்கி கொடுத்து அவர்களையும் கூட அனுப்பி வைத்தார். அந்த பாதுகாவலர் முன் சீட்டில் இருக்க வேண்டும், நாங்கள் இருவரும் பின் சீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அடுத்ததாக, டெல்லியில் அவார்டு நிகழ்ச்சிக்கு போக வேண்டிய சூழல். அதற்கு முன்னதாக கமல்ஹாசன் மற்றும் எம்.ஜி.ஆர் பட சூட்டிங்கில் ஐஸ் கட்டி மேல் படுத்தும், குளிர்ச்சியான அறையில் இருப்பதாகவும் நடித்ததால் எனக்கு தும்மல் இருமல் அதிகமானது. அப்போது உனக்கு நிமோனியா வந்துடும், அதனால் டெல்லிக்கு போகாத என எம்.ஜி.ஆர் சொன்னார். டெல்லி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து என்னையும், கமல்ஹாசனையும் அழைத்திருந்தார்கள். கமல்ஹாசன் வர முடியாத சூழல் இருந்ததால், நான் நிச்சயம் போவேன் என்று கூறினேன். பின்னர் பெட்டி எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு கிளம்பலாம் என்றால், பெட்டிகளை காணவில்லை. ஸ்பாட்டில் கேட்டப்போது எம்.ஜி.ஆர் வைத்திருக்கிறார் என்றார்கள். எம்.ஜி.ஆரிடம் கேட்டால், நீ இந்த நிலையில் போனால், உனக்கு உடம்பு முடியாமல் போய்விடும். நீ ஆஸ்பத்திரியில் படுத்துவிட்டால், பாவம் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி போகவிட மறுத்துவிட்டார்.
அடுத்ததாக, ஊருக்கு உழைப்பவன் சூட்டிங் முடிந்தவுடன் எல்லோரிடம் பணம் வந்துருச்சா என கேட்டார். நான் இல்லை என்று, முந்தைய படத்தில் உள்ள சிக்கலை கூறியபோது, தயாரிப்பு தரப்பை கூப்பிட்டு இந்தப் படத்திற்கான பணத்தைக் கொடுங்கள் என்று கொடுக்க வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“