தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் கட்டி ஆண்டவர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். எம்.ஜி.ஆர் படங்கள் சமூக அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவது, அதிரடி ஆக்ஷன் இருக்கும் அதே வேளையில் ரொமான்ஸுக்கும் பஞ்சம் இருக்காது. எம்.ஜி.ஆர் உடன் நடித்த கதாநாயகிகள், அவர்களின் முக்கியத்துவம் பற்றி பத்திரிகையாளர் துரை கருணா ஆகாயம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர் கதாநாயகி மடியில் தலை வைக்க கூடாது என ஷூட்டிங்கில் ரகளை செய்த பிரபல நடிகை கணவர் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியில் பத்திரிகையாளர் துரை கருணா கூறியிருப்பதாவது: “எம்.ஜி. ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர், முதல் முறையாக 1947 ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் டி.ஆர் ராஜகுமாரி கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் ஒரு 34 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இதில் எம்.ஜி.ஆர் உடன் அதிகபட்சமாக சரோஜாதேவி 25 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சரோஜாதேவியைவிட எம்.ஜி.ஆர் அதிகப் படங்களில் நடித்தது ஜெயலலிதாவுடன்தான். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் 28 படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் படங்களில் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி ஜோடி பெண் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. ஆனால், குரூப் டான்சராக இருந்த சரோஜாதேவி அவருடைய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனத்கில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உள்ளது.
எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகராக இருந்து போராடி ஹீரோவானவர். பின்னர், சாயா என்ற படத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் அப்போது பிரபல கதாநாயகி நடிகையாக இருந்த ருக்மணிதேவி என்ற நடிகை எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.
அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் கதாநாயகி ருக்மணிதேவி மடியில் படுத்து அவருடைய முகத்தைப் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருந்த நடிகை ருக்மணிதேவியின் கணவர் உடனடியாக வந்து எம்.ஜி.ஆரின் கைகளைப் பிடித்து எழுந்திரு என்று அவமதித்திருக்கிறார். துணை நடிகராக இருந்து இன்று கதாநாயகனாகிவிட்டு என்னுடைய மனைவி எவ்வளவுப் பெரிய நடிகை, கதாநாயகி அவள் மடியில் நீ தலைவைத்து படுத்து நடிப்பதா என்று கேட்டு ரகளை செய்திருக்கிறார். நடிகை ருக்மணிதேவியின் கணவரின் இந்த செயல் எம்.ஜி.ஆரை மிகவும் புண்படுத்தியது. அப்போது, இயக்குனர், தயாரிப்பாளர் அனைவரும் எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.” என்ற தகவலை துரை கருணா பகிர்ந்துள்லார்.
கதாநாயகியின் கணவரால் அவமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், பின்னாளில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்டார். தமிழ்நாட்டையும் ஆண்டார். அவருடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகைகள் தவம் கிடந்தார்கள்.
எம்.ஜி.ஆர் படத்தில் கதாநாயகியாக நடித்து அவர் மூலமாக அரசியலுகு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வரானார். தமிழ்நாட்டு மக்கல் அம்மா என்று அழைக்கு ஸ்தானத்துக்கு உயர்ந்தார் என்பது வரலாறு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.