Nadigar Sangam Elections: நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விஷால் தலைமையில் ‘பாண்டவர் அணியும்’, பாக்யராஜ் தலைமையில் ‘சுவாமி சங்கரதாஸ்’ அணியும் இதில் மோதுகிறார்கள். இத்தேர்தல் சென்னையிலுள்ள, எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 23-ம் தேதி அதே கல்லூரியில் நாடகம் நடத்த நடிகர் எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றிருக்கிறார்.
எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளதால், அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா என்பதில் குழப்பம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
தவிர, எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், நடிகர் சங்க தேர்தல் நடத்த அனுமதி பெறவில்லை என கூறப்படும் நிலையில், நடிகர் சங்க தேர்தலுக்கு, பாதுகாப்பு கேட்ட நடிகர் விஷாலின் மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.