எஸ்.பி. பி பாட 15 நாள் ஷூட்டிங் தள்ளி வைத்த எம்.ஜி.ஆர்... இந்தப் பாட்டு செம்ம ஹிட்!

இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என்று எம்ஜிஆர் ஒற்றைக்காலில் நின்றதால் 15 நாட்கள் ஷூட்டிங் காத்திருப்புக்கு பின் கம்போஸ் செய்யப்பட்ட பாடல் பற்றி பார்க்கலாம்.

இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என்று எம்ஜிஆர் ஒற்றைக்காலில் நின்றதால் 15 நாட்கள் ஷூட்டிங் காத்திருப்புக்கு பின் கம்போஸ் செய்யப்பட்ட பாடல் பற்றி பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-18 171956

பல இனிமையான பாடல்களை கேட்டால் பல பேருக்கு முதலில் மனதுக்கு வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். அவருடைய குரல்களால் மெருகேறிய பாடல்கள் ஏராளம்.

Advertisment

இத்தகைய சாதனைக் கலைஞனான எஸ்.பி.பி, அவரது குரலில் முதன்முதலில் பாடிய தமிழ் பாடல் ஆயிரம் நிலவே வா என்கிற பாட்டு தான். எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படத்துக்காக அவர் இப்பாடலை பாடினார்.

இந்த பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது. அதன்படி ஒருநாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் தன்னுடைய பட விஷயமாக ஆலோசனையில் இருந்தபோது அருகே உள்ள செட்டில், தெலுங்கு பட பாடல் கம்போஸிங் ஒன்று நடைபெற்று இருக்கிறது.

அதில் எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தாராம். அவரின் குரலை கேட்டு மெய் மறந்துபோன எம்.ஜி.ஆர் யாருப்பா இவ்வளவு அழகாக பாடுவது என கேட்டிருக்கிறார்.

Advertisment
Advertisements

பின்னர், எஸ்.பி.பி.யை நேரில் அழைத்து சந்தித்த எம்.ஜி.ஆர்., மிகவும் அன்போடு மற்றும் உற்சாகத்தோடு, “நீ என் படத்துக்கு கட்டாயமாக ஒரு பாடல் பாடணும்” என்று சொல்லியிருக்கிறார்.

அது எஸ்.பி.பிக்கு மிகப்பெரிய வரமாகவும், வாழ்நாள் வாய்ப்பாகவும் இருந்தது. “தமிழில் என் முதல் பாடலே எம்.ஜி.ஆருக்கா!” என்ற ஆச்சரியமும் மகிழ்ச்சியுமே கலந்து, அவர் உள்ளம் கனிந்து பொறுமையோடு ஒப்புக்கொண்டு சென்றார்.

ஆனால் அதே சந்தோஷத்தில் அவர் வீட்டிற்குச் சென்று சில மணிநேரங்களில், அவருக்கு திடீரென டைபாய்டு காய்ச்சல் வந்துவிடுகிறது.

உடல்நிலை மோசமாகி, அவருக்கு ஓய்வே தேவைப்படும் அளவுக்கு சோர்வாகியிருந்தார். இதனால், எம்.ஜி.ஆரின் படத்திற்கு அவர் பாடவேண்டிய அந்த முக்கியமான பாடலை பாட முடியாமல் போனது.

எம்.ஜி.ஆருக்கு பாட்டு பாட முடியவில்லையே என்கிற சோகத்தில் இருந்திருக்கிறார் எஸ்.பி.பி. அப்போது தான் எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.

இந்தப் பாடலை நீ தான் பாடப்போகிறாய். உனக்கு உடல்நலம் சரியாகும் வரை காத்திருந்து அதன் ரெக்கார்டிங்கை வைத்துக் கொள்கிறோம் என சொல்லி இருக்கிறார் எம்.ஜி.ஆர். 

இப்படி எஸ்.பி.பி.யின் இசைப்பயணத்தை தமிழில் தொடங்கி வைத்த பாடல் தான் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் இடம்பெறும் ஆயிரம் நிலவே வா பாடல்.

எஸ்.பி.பிக்காக எம்.ஜி.ஆர் சுமார் 2 மாதங்கள் வரை காத்திருந்து பின்னர் ரெக்கார்டு செய்யப்பட்ட இந்த பாடல் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: