/indian-express-tamil/media/media_files/Qc5quTyy5WxBFhkjdYZN.jpg)
எம்.ஜி.ஆர் கோபக்காரர் என்றால் அதை விட கோபக்காரர் புலமைப் பித்தன். கண்ணதாசன் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின் எம்.ஜி.ஆர் பல்வேறு கவிஞர்களை உருவாக்கி அவர்களுடன் பணியாற்றினார், அந்த வரிசையில் கவிஞர் புலமைப் பித்தனும் இருந்தார். அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர் புலமைப் பித்தனுடன் நெருக்கமாக இருந்தார். இவர்கள் இருவருக்குக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படும். பின் சேர்ந்து கொள்வார்களாம்.
அப்படி இருக்கு ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்லடில் எம்.ஜி.ஆர் கோவை செழியன் உடன் அமர்ந்து தீவிரமாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.கவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இது 1972-ல் நடந்தது. அப்போது எம்.ஜி.ஆர்
அரசியல், திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அப்போது ஷூட்டிங் ஸ்பார்ட் என்பதால் எம்.ஜி.ஆரைப் பார்க்க கூட்டமாக பலர் வருகின்றனர். அதில் புலமைப் பித்தன் அவர்களும் வந்திருக்கிறார். இதை கவனிக்காத எம்.ஜி.ஆர் இங்கே அரசியல் பேசிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் வெளியே போங்கள் என்று கூறிவிடுகிறார்.
இதனால் கோபமடைந்த புலமைப் பித்தன் இனி இங்கு வர மாட்டேன் என்று கூறி செல்கிறார். இதைப் பின்னர் அறிந்த எம்.ஜி.ஆர் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆட்களை அனுப்புகிறார் ஆனால் அவர் வரவில்லை.
மறுநாள் எம்.ஜி.ஆர் நடத்தும் பத்திரிகை அலுவலகத்திற்கும் வரவில்லை. அ.தி.மு.க அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார். அவரின் நெருங்கிய உதவியாளர் புலமைப் பித்தனுக்கு போன் செய்து, எம்.ஜி.ஆர் உங்களிடம் பேசக் காத்திருக்கிறார். அவர் எந்த வேலையும் செய்யவில்லை. காலையில் இருந்து சாப்பிட வில்லை என்று கூறுகிறார். இதை கேட்டு மனமுடைந்த புலமைப் பித்தன் உடனே அலுவலகம் சென்று எம்.ஜி.ஆரை சந்திக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.