ஆரஞ்சு கண்ட்ரி என்ற மலேசியா நிறுவனம் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை 3டி படமாக உருவாக்கியுள்ளனர். விரைவில் ரிலீஸ்
சமீபக் காலங்கலாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவது டிரெண்டாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோம், நடிகை சாவித்ரி என பல வாழ்க்கை வரலாறு படங்கள் ஹிட் ஆனது. அதே போல், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மறைந்த நடிகர் என்.டி.ஆர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவெடுத்து வருகிறது.
எம்.ஜி.ஆர் 3டி படம்
அந்த வரிசையில், தற்போது மலேசியா அனிமேஷன் நிறுவனமான ஏ.என் ஃபேஸ், ஆரஞ்சு கண்ட்ரி நிறுவனம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை கொண்டு இரண்டு மணிநேரம் படத்தை உருவாக்கி உள்ளனர். அதுவும் 3டி டெக்னாலஜி பயன்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை இந்நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் வெளியிட முடிவெடுத்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி சிட்டியில் டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை நடைபெற இருக்கும் ‘இண்டிவுட் ஃபிலிம் கார்னிவல் 4வது எடிஷன்’ விழாவில் இப்படம் வெளியாக தயாராக உள்ளது.