/indian-express-tamil/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-232905-2025-08-17-23-30-18.jpg)
இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று இன்றளவும் புகழப்படுபவர் தான் பாக்கியராஜ். இவர் சினிமாவில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், என்று பன்முகம் கொண்டவர்.
இவரது படங்களுக்கு என்று தனி கூட்டமே உண்டு. சிறிய கதை களத்தை எடுத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான காட்சிகளை நகர்த்தி செல்வதில் வல்லவர்.
‘திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் கே.பாக்கியராஜ். இவர் இயக்கி நடிக்கும் எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் தான்.
குறிப்பாகத் தாய்மார்களைக் கவரும் விதத்தில் இவரைப் போல யாரும் படம் எடுக்க முடியாது. சொல்ல முடியாத ஒரு விஷயத்தையும் நாசூக்காக சொல்வதில் வல்லவர்.
அந்த வகையில் குறிப்பாக கணவன், மனைவி உறவு, முக்கோண காதல் கதை மற்றும் குடும்ப சிக்கல்கள் கொண்ட கதை அம்சங்களை சிறப்பாகக் கொடுப்பார் பாக்கியராஜ்.
உதாரணமாக முந்தானை முடிச்சு, சுவர் இல்லாத சித்திரங்கள், தூறல் நின்னு போச்சு, அந்த 7 நாள்கள் ஆகிய படங்களைச் சொல்லலாம். இது நம்ம ஆளு படத்தில் அவர் கத்தி மேல் நடக்கும் கதை. அதையும் சூப்பர்ஹிட்டாக எடுத்து அசத்தி இருந்தார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்.
அப்படி இவர் எடுத்த ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு திருத்தத்தை கூறியிருக்கிறார்.
டார்லிங், டார்லிங், டார்லிங் 1982ஆவது ஆண்டில் கே. பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படமாகும். பாக்யராஜ் உடன் பூர்ணிமா, சுமன் ஆகியோர் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பின்னர் கன்னடத்தில் பிரேமி நம்பர் 1 என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
இந்த படத்தில் ஹீரோ அதாவது பாகியராஜ் அவர்கள் வில்லனிடம் ஒரு சண்டை காட்சியில் அடி வாங்குவது போலும், திருப்பி அடிக்காமல் இருப்பர். அந்த சண்டை காட்சியை சுட்டி காட்டி, "ஹீரோ என்றால் கண்டிப்பாக இரண்டு அடிகளாவது அடிக்க வேண்டும்.
அப்போது தான் மக்களுக்கு ஹீரோ மீது நம்பிக்கை வரும். வில்லனுக்கு கராத்தே தெரியும் தெரியாது பற்றியெல்லாம் சிந்திக்க கூடாது. அந்த சண்டை காட்சியில் அது மட்டும் தவறாக இருந்தது." என்று புரட்சி தலைவர் இவரிடம் கூறியிருக்கிறார்.
இதய ஒரு நேர்காணலில் ஷேர் செய்த பாகியராஜ், எம்.ஜி.ஆரிடம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்றும், அவர் கேட்காமலேயே உரிமையாக இப்படி கூறுவார் என்று கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.