உங்க படம் ரிலீஸ் ஆகணுமா? வேண்டாமா? தயாரிப்பாளரை மிரட்டி எம்.ஜி.ஆர் வாங்கிய ஹிட் பாடல்: எந்த படம் தெரியுமா?

ஒரு படத்தில் தன்னுடைய பாடல் இடம்பெற வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் தயாரிப்பாளரையே மிரட்டியதாக கவிஞர் முத்துலிங்கம் நேர்க்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரு படத்தில் தன்னுடைய பாடல் இடம்பெற வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் தயாரிப்பாளரையே மிரட்டியதாக கவிஞர் முத்துலிங்கம் நேர்க்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Song

எம்.ஜி.ஆர் எவ்வாறு தனது பாடல் அவரது படத்தில் இடம்பெற வேண்டும் என நினைத்த அவரது மனிதநேயம்  பற்றியும் அதற்காக அவர் தயாரிப்பாளரை மிரட்டிய சம்பவம் பற்றியும் கவிஞர் முத்துலிங்கம் டூரிங் டாக்கீஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisment

1977 ஆம் ஆண்டு வெளியான "மீனவ நண்பன்" திரைப்படம், இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., நடிகை லதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வெற்றிப் படமாகும். கிராமப்புற மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் சிக்கல்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான், எம்.ஜி.ஆரின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மனிதநேயம் மற்றும் தொழில் மீதான அவரது ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் "மீனவ நண்பன்" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த வேளையில், எம்.ஜி.ஆர் அங்கு வந்த பாடலாசிரியர் முத்துலிங்கத்திடம், தாம் எழுதிய பாடல் ஏதேனும் படத்தில் இடம்பெற்றுள்ளதா என்று கேட்டார். அதற்கு அவர் தன்னை அழைக்கவே இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதைக் கேட்ட எம்.ஜி.ஆர். மிகவும் கோபமடைந்தார். படத்தின் மேனேஜர் ராஜாராம் என்பவரிடம், "நான் சொன்ன பிறகும் ஏன் அவரை அழைக்கவில்லை?" என்று கடிந்துகொண்டார். அப்போது மேனேஜர், பாடலாசிரியர் ஊரில் இல்லை எனப் பதிலளித்தார். எனினும், எம்.ஜி.ஆர். சற்றும் திருப்தியடையவில்லை.

Advertisment
Advertisements

meenava nanban

மேலும், ஒரு பாடல் காட்சிக்கான சூழ்நிலை படத்திற்கு இல்லை என்று மேலாளர் கூறியபோது, எம்.ஜி.ஆர், "ஒரு கனவுப் பாடலுக்கு என்ன சூழ்நிலை வேண்டும்? சூழ்நிலை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதுதான் கனவுப் பாடல்!" என்று அறிவுரை வழங்கினார்.

எம்.ஜி.ஆரின் வலியுறுத்தலுக்குப் பிறகு, "தங்கத்தில் முகமெடுத்து" என்ற சூப்பர்ஹிட் பாடல் உருவாக்கப்பட்டது. இந்த சம்பவம், எம்.ஜி.ஆர். தனக்காக மட்டும் சிந்திக்காமல், தன்னைச் சார்ந்தவர்களின் திறமையையும், நலனையும் எப்படிக் கருத்தில் கொண்டார் என்பதை உணர்த்துகிறது. இந்த பாடல், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான பாடலாக நிலைத்து நிற்கிறது.

அந்தப் பாடலாசிரியர் வேறு யாருமல்ல, கவிஞர் முத்துலிங்கம் ஆவார். சிவகங்கையைச் சேர்ந்த இவர், எம்.ஜி.ஆர் மீது கொண்ட தீவிர பக்தியால் "முரசொலி" பத்திரிகையில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ்களில் பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, "தங்கத்தில் முகமெடுத்து" என்ற காலத்தால் அழியாத பாடல் உருவானது. கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் "உழைக்கும் கரங்கள்", "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" போன்ற பல எம்.ஜி.ஆர். படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு, அவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு "எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்" என்ற நூலையும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: