1977 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்த வகையில், அவர் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும்.
இந்தப் படம், எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின் 1978 பொங்கல் நாளன்று வெளியாகி 100 நாள்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.
இந்தப் படத்தில் மாங்கல்யம், வீரமகன் போராட, தாயகத்தின் சுதந்திரமே ஆகிய பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதி இருந்தார். அமுதத் தமிழில் மற்றும் தென்றலில் ஆடிடும் ஆகிய இரு பாடல்களை புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.
இதில் வீரமகன் போராட பாடலின் கதைகளம் மற்றும் எடுக்கப்பட்ட விதம், பாடல் உருவான கதை குறித்து கவிஞர் முத்துராமலிங்கம் வலையொளி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
அப்போது, வீரமகன் போராட பாடல் வெளியான விதம் குறித்து பேசியிருந்தார். இந்தப் பாடல் வெளியாக கிட்டத்தட்ட 1 மாதத்துக்கு மேல் ஆகியுள்ளது.
மதுரையை சுந்தரபாண்டியன் மீட்பது மற்றும் மக்களை போராட அழைப்பது போல் பாடல் வரிகள் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த கதைக்கு ஏற்ப பாடல் வரிகளில் அனல் தெறிக்க கவிஞர்கள் எழுதியுள்ளனர்.
ஆனால் எம்.ஜி.ஆர் இதிலும் மென்மையான அணுகுமுறையை விரும்பியுள்ளார். வன்முறையாக பாடல் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒருமாத காலத்துக்கு பின்னர் வீரமகன் போராட பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மற்றும் பி.எஸ். வீரப்பா உடனான வாள் சண்டைக் காட்சிகள் மைசூர் அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடலில், வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட மானமொரு வாழ்வாக வாழ்வு நதி தேனாக முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்” என்பன போன்ற வரிகள் எம்.ஜி.ஆர்.க்கு மிகவும் பிடித்தவை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“