/indian-express-tamil/media/media_files/2025/06/16/Z18hM0IozrCDyW6ICil9.jpg)
தென்னிந்தியாவிலேயே அதிகமான திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் என்று பார்த்தால் மாடர்ன் தியேட்டர்ஸ் என்று கூறுவார்கள். இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபராக டி.ஆர். சுந்தரம் இருந்தார். வெளிநாட்டில் கல்வி பயின்ற இவர், பல்வேறு புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.
அவர் குறித்து 'முதலாளி' என்ற ஒரு புத்தகம் வெளியாகி இருந்தது. வேங்கடசாமி என்ற பத்திரிகையாளர், அப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அந்த புத்தகத்தில் டி.ஆர். சுந்தரம் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' திரைப்படத்தை பலரும் பார்த்திருப்போம். அன்றைய சூழலில் ஒரு பாடல் காட்சி மற்றும் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினால், படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் சூழல் இருந்தது.
ஆனால், அப்போது படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர் வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது, கதாநாயகன் வரவில்லை என்பதால், படப்பிடிப்பை ஒத்திவைத்து விடலாம் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், டி.ஆர். சுந்தரம் அவ்வாறு செய்யவில்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுனவத்தில் பணியாற்றிய முத்து என்ற ஒரு நடிகரை எம்.ஜி.ஆருக்கு பதிலாக டூப்பாக பயன்படுத்தி படப்பிடிப்பை முடித்து விட்டார்.
அதன் பின்னர், சில நாட்கள் கழித்து டி.ஆர். சுந்தரத்தை காண்பதற்கு எம்.ஜி.ஆர் வந்தார். அப்போது, சில காரணங்களால் தன்னால் படப்பிடிப்பிற்கு வர முடியவில்லை என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதற்கு, பரவாயில்லை என்று கூறிய டி.ஆர். சுந்தரம், படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு செல்லுமாறு எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார்.
படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். ஏனெனில், அக்காட்சியில் மற்றொரு நபர் தான் நடித்துள்ளார் என்பதை எம்.ஜி.ஆரால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அதனை படமாக்கியுள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.