Advertisment

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை: என்ன பிரச்சனை?

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் படம் வெளியாக இருந்த நிலையில் டப்பிங் உரிமம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 24 வரை படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sarathkumar gave Rs 100 to Raghava Lawrence

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடன இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ருத்ரன். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்பட பல படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். கதிரேசன் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisment

படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாக்கி உள்ளது. படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி எதிர்பார்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் படம் வெளியாக இருந்த நிலையில் டப்பிங் உரிமம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 24 வரை படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமத்திற்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக முன்பணமாக ரெவன்சா நிறுவனம் ரூ.10 கோடி செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய கொள்ள ஏதுவாக ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raghava Lawrence
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment