Advertisment
Presenting Partner
Desktop GIF

81 வயதில் இடைவிடாத புஷ் அப்: ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மிலிந்த் சோமனின் தாயார்

மிலிந்த் சோமனின் தாயார் ஜூலை 3 ஆம் தேதி 81-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Milind Soman's 81 year Mother's push up goes viral

Milind Soman's 81 year Mother's push up goes viral

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, கார்த்தி நடித்த ’பையா’ மற்றும் ’அலெக்ஸ் பாண்டியன்’ போன்ற திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தவர், நடிகரும் மாடலுமான மிலிந்த் சோமன்.  தற்போது அவரது தாயார் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Advertisment

,

மிலிந்த் சோமனின் தாயார் ஜூலை 3 ஆம் தேதி 81-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த வயதில் அவர் 15 புஷ்-அப்களைச் எடுத்து, வியப்பில் ஆழ்த்தினார். இதனை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். தனது தாயார் உஷா சோமன் புஷ் அப் எடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மிலிந்த், “3 ஜூலை 2020” என தலைப்பிட்டு, ”15 புஷ் அப் மற்றும் வெல்லத்தில் செய்த வெண்ணிலா பாதாம் கேக். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயி சிரித்துக் கொண்டே இருங்கள் !!!” என்று தெரிவித்திருக்கிறார்.

,

மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதாவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, சாம்பியாவில் பங்கி ஜம்பிங் செய்து தனது மாமியார் அவரது பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவரது திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவை வைரல் செய்த நெட்டிசன்கள், உஷா சோமனின் உடற்தகுதி வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment