கோவை குணா மரணம்; மிமிக்ரி கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி

கோவை குணா உயிரிழந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

Kovai Guna
கோவை குணா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் சின்னத்திரை பிரபலங்கள்

உடல் நலக்குறைவால் நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உயிரிழந்ததையடுத்து அவரது உடலுக்கு திரையுலகங்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர். பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

இதையும் படியுங்கள்: 20 வருடம் பட்ட கஷ்டம்… அந்த ஒரு நிமிடம் என் பாக்கியம்… கோவை குணா நினைவலைகள்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார். தற்போது கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கபட்டது.

அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள், பல குரல் கலைஞர்கள் என அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Mimicry artist kovai guna died cinema celebrities tributes his body

Exit mobile version