’நான் உயிரோட தான் இருக்கேன்’: ஒரே மாதிரி பெயரால் நடிகைக்கு வந்த பிரச்னை

"சில மீடியா ரிப்போர்ட்டுகளின் படி, நான் இன்று இறந்து விட்டேன். ஆனால் கடவுளின் கிருபையால் இன்று இருக்கிறேன்."

By: October 6, 2020, 9:25:07 AM

பாலிவுட் நடிகை மிஷ்டி முகர்ஜி, பெங்களூரு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) இரவு உயிரிழந்தார். அவரை மிஷ்டி சக்ரவர்த்தி என தவறாக பாலிவுட் ஊடகங்கள் அடையாளப் படுத்தின.  இவர் அதர்வாவின் ‘செம போத ஆகாத’ என்ற படத்தின் மூலம் 2018-ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

IPL 2020: தெறிக்க விட்ட டெல்லி – திணறிய பெங்களூரு

“சில மீடியா ரிப்போர்ட்டுகளின் படி, நான் இன்று இறந்து விட்டேன். ஆனால் கடவுளின் கிருபையால் இன்று இருக்கிறேன். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும் தோழர்களே” என இது குறித்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் மிஷ்டி சக்ரவர்த்தி.

கர்நாடகா ஸ்பெஷல் பிஸிபேளாபாத்! அப்படியே சாப்பிடலாம்

தவிர, இந்த இளம் நடிகை கடந்த ஆண்டு தொடக்கத்தில், ‘மணிகர்னிகா’ படத்தில் கங்கனா ரனாவத் தனது காட்சிகளை வெட்டியதாக குற்றம் சாட்டியிருந்தார். மணிகர்னிகா: தி ராணி ஆஃப் ஜான்சியில் காஷிபாயாக நடித்த மிஷ்டி சக்ரவர்த்தி, இறுதிப் படத்தைப் பார்த்த போது, தனது காட்சிகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். கங்கனா ரனாவத்தின் இயக்கத்தில் அவரது பாத்திரம் கேலிச்சித்திரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத் தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mishti chakraborthy clarifies her death instagram mishti mukherjee

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X