மிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்!

தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்

Miss India 2019 Suman Rao : வருடாவருடம் மிஸ் இந்தியா போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொள்வார்கள். இம்முறை இந்த பட்டத்திற்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமன் ராவ் என்ற 22 வயது இளம்பெண் பட்டத்தை தட்டிச் சென்றார். 2018ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், சுமன் ராவிற்கு கிரீடத்தினை சூட்டினார்.

Miss India 2019 Suman Rao, Anukreethy Vas

முன்னாள் மிஸ் இந்திய அழகி அனுக்ரீத்தி வாஸ் சுமன் ராவிற்கு கீரிடம் சூட்டிய போது

Miss India 2019 Suman Rao, Anukreethy Vas

2018ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்ற அனுக்ரீத்தி வாஸூடன் சுமன் ராவ்

தெலுங்கானாவை சேர்ந்த சஞ்சனா விஜ் என்பவர் இரண்டாம் இடம் பெற்றார். மேலும் நேற்றைய இறுதி போட்டியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைட்டட் பட்டத்தினையும், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி என்பவர் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டங்களையும் வென்றனர்.

இந்த வருடம் தாய்லாந்து நாட்டில் நடைபெற இருக்கும் மிஸ்  வேர்ல்ட் எனப்படும் உலக அழகிக்கு போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்.

மேலும் படிக்க : ஒரு பெண்ணை தனியாக வளர்ப்பது இந்த சமூகத்தில் சுலபமான காரியம் இல்லை – அனுக்ரீத்தி வாஸ்

இவர்கள் தான் அந்த நடுவர்கள்

பாலிவுட் பிரபலங்கள் சுனில் சேத்ரி, நடன இயக்குநர் ரெமோ டி சோசா, 2018ம் ஆண்டில் உலக அழகி வெனஸா, நடிகைகள் சித்ரங்கா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடுவர்களாக இந்த போட்டியில் பங்கேற்றனர். மேலும் 2017ல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற மனுஷி சில்லாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close