Advertisment
Presenting Partner
Desktop GIF

Oscars 2023: மேடையில் பாடிய எம்.எம். கீரவாணி... லேடி காகா, ஜான் வில்லியம்ஸ் உற்சாகம்

மார்வெல் நட்சத்திரம் எலிசபெத் ஓல்சனைப் போலவே, சக சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக பரிந்துரைக்கப்பட்ட லேடி காகா, கீரவாணி பாடியதை மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

author-image
WebDesk
New Update
Oscars 2023

Oscars 2023

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோல்டன் குளோப்ஸில் ஒரு மறக்க முடியாத உரைக்குப் பிறகு, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி திங்கள்கிழமை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றார்.

Advertisment

பீரியட் ஆக்‌ஷன் படமான ஆர்.ஆர்.ஆர். படத்தில், கீரவாணியின் “நாட்டு நாட்டு” பாடல், அமெரிக்காவில் ஒரு ஆச்சரியமான பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, வெற்றிகரமான விருதுகள் சீசன் ஓட்டத்தை நிறைவு செய்தது.

ஜானெல்லே மோனே மற்றும் கேட் ஹட்சன் ஆகியோர் “நாட்டு நாட்டு” பாடல் விருது வென்றதை அறிவித்த போது, மேடையில் ஏறிய, ​​கீரவாணி தி கார்பெண்டர்ஸ் (The Carpenters) இசையைக் கேட்டு வளர்ந்ததாகக் கூறினார்.

பாடலாசிரியர் சந்திரபோஸ் அவருக்கு அருகில் நிற்க, கீரவாணி தி கார்பெண்டர்ஸின் "டாப் ஆஃப் தி வேர்ல்ட்" பதிப்பில் நுழைந்தார், அவர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் இந்தியாவுக்கு நன்றி செலுத்தினார்.

என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது, அதே போல் ராஜமௌலி மற்றும் எனது குடும்பத்தினரின் ஆசை, RRR வெற்றிபெற வேண்டும், ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்னை உலகின் மேல் உயர்த்த வேண்டும், என்று கீரவானி பாடினார், அதைக் கேட்ட கூட்டம் மகிழ்ச்சியில் ஆரவாரம் அடைந்தது.

முன்னதாக மாலையில் "நாட்டு நாட்டு" நிகழ்ச்சியின் லைவ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய தீபிகா படுகோன், மிகவும் உணர்வுபூர்வமாகப் இருந்தார்.

மார்வெல் நட்சத்திரம் எலிசபெத் ஓல்சனைப் போலவே, சக சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக பரிந்துரைக்கப்பட்ட லேடி காகா, கீரவாணி பாடியதை மகிழ்ச்சியுடன் பார்த்தார். ஜான் வில்லியம்ஸ் மனமுவந்து பாராட்டினார்.

ஆஸ்கார் விருதுக்காக டயான் வாரன், காகா, ரிஹானா மற்றும் சன் லக்ஸ், மிட்ஸ்கி, டேவிட் பைர்ன் ஆகியோரின் பாடல்களை "நாட்டு நாட்டு" பாடல் பின்னுக்கு தள்ளியது.

இந்த வெற்றிக்கு பதிலளித்த ஆர்.ஆர்.ஆர். நட்சத்திரம் ஜூனியர் என்டிஆர் ஒரு அறிக்கையில், “இப்போது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது RRRக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கு இந்தியாவிற்கும் கிடைத்த வெற்றி. இது ஆரம்பம் என்று நான் நம்புகிறேன். இந்திய சினிமா எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது. கீரவாணி அவர்களுக்கும் சந்திரபோஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ராஜமௌலி என்ற தலைசிறந்த கதைசொல்லி மற்றும் நம் மீது அன்பைப் பொழிந்த பார்வையாளர்கள் இல்லாமல் நிச்சயமாக இவை எதுவும் சாத்தியமில்லை. தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழுவினர் இன்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு மற்றொரு ஆஸ்கார் விருதைக் கொண்டு வந்ததற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆஸ்கார் விழாவில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இது ஒரு பெரிய இரவு. ஆர்ஆர்ஆர் தவிர, தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதை வென்றது. ஷௌனக் சென்னின் ஆல் தட் ப்ரீத்ஸ் சிறந்த ஆவணப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அது நவல்னியிடம் தோற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Oscar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment