/indian-express-tamil/media/media_files/2025/10/06/apsara-cj-2025-10-06-13-37-07.jpg)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழில் விஜய் டி.வி-யில் நேற்று (அக்.5) பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மிகப்பிரம்மண்டமாக தொடங்கியது. இதில், பிக்பாஸ் வீட்டில் இருக்கப்போகும் 15 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்குகளுடன் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருப்பார்கள். இறுதியில் இந்த டாஸ்குகளை எல்லாம் முடித்து யார் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் சீசன் 8-லிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 9-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அப்சரா சி.ஜே என்ற திருநங்கை போட்டியாளராக நுழைந்துள்ளார்.
யார் இந்த அப்சரா சி.ஜே?
யார் இந்த அப்சரா சி.ஜே என்ற கேள்வி ரசிகர்கள் பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அதாவது, திருநங்கை அப்சரா சி.ஜே ஒரு மாடல் ஆவார். இவர் பல பேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் மாடலிங்கை தவிர நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அப்சராவுக்கு கிடைத்த இந்த பிக்பாஸ் வாய்ப்பானது அவரது திறமையை ரசிகர்களுக்கு எடுத்து செல்ல ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அவரது ஆளுமையையும் இந்த நிகழ்ச்சி மூலம் அவர் வெளிப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. தன்னம்பிக்கை நிறைந்த அணுகுமுறையுடனும், பெரிய லட்சியங்களுடனும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அப்சரா சி.ஜே இந்த போட்டியில் எப்படி விளையாடுவார் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தனது விடாமுயற்சி மற்றும் நேர்த்தியை கொண்டு பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் கடினமான டாஸ்குகளை அப்சரா சி.ஜே சிறப்பாக கையாள்வார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இதற்கு முன்பு நமீதா மாரிமுத்து, ஷிவின் ஆகிய திருநங்கை போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அப்சரா சி.ஜே. களமிறங்கி இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.