scorecardresearch

நல்ல வரவேற்பு பெற்ற த்ரிஷ்யம் 2 , சக்ரா திரைப்படங்கள்: ஆன்லைனில் லீக்

Drishyam 2 Tamil Rockers : மோகன்லாலின் பாத்திரத்தை கமல்ஹாசன் நடிக்க ஜீது இயக்கத்தில் திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது

நல்ல வரவேற்பு பெற்ற த்ரிஷ்யம் 2 , சக்ரா திரைப்படங்கள்: ஆன்லைனில் லீக்

மலையாளத்தில் மோகன்லால், நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படமும், விஷால் நடிப்பில் தமிழில் வெளியான ‘சக்ரா’ படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது  இணையதளத்தில் வெளியிட்டது.

இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது.

 

 

2013ல், மோகன்லால் நடித்த திரிஷ்யம் என்ற திரில்லர் திரைப்படம் வெளியானது. இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.    மோகன்லாலின் பாத்திரத்தை கமல்ஹாசன் நடிக்க ஜீது இயக்கத்தில் திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் மற்ற இயக்குனர்களால் மறுஆக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அமேசான் பிரைமில் திரையிடப்பட்டது.  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வழக்கம் போல் தமிழ் ராக்கர்ஸ் இந்த படத்தையும்  வெளியிட்டுள்ளது. விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று  உள்ளிட்ட படங்களையும் முதல் நாளே க்ளீயரான பிரிண்ட்டில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த தமிழ் ராக்கர்ஸ், எப்பேற்பட்ட படம் வந்தாலும், அது யார் நடித்திருந்தாலும் பாகுபாடின்றி ரிலீஸ் செய்து வருகிறது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Mohanlal drishyam 2 vishal chakra movies leaked online on tamil rockers