Advertisment
Presenting Partner
Desktop GIF

முத்தம் பரிமாறிக்கொண்ட மோகன்லால் - மம்முட்டி... ரஜினி, ஷாருக் பாடலுக்கு டான்ஸ் : வைரல் வீடியோ

மோகன்லால், ஜவான் படத்தில் அனிருத் இசையில் வெளியான ஷாருக்கானின் “ஜிந்தா பந்தா” மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “ஹுக்கும்” ஆகிய இரண்டுக்கும் நடனமாடினார்.

author-image
WebDesk
New Update
Mammotty and Mohanlal

மோகன்லால் - மம்முட்டி

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் பால்களுக்கு தனது நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Mohanlal kisses Mammootty, delivers electrifying dance performance on Shah Rukh Khan’s ‘Zinda Banda’ and Rajinikanth’s ‘Hukum’. Watch

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமீபத்தில் கொச்சியில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சிறுத்தை அச்சிடப்பட்ட சட்டையுடன் பழுப்பு நிற லெதர் டிசர்ட் மற்றும் பேன்ட் அணிந்திருந்த, மோகன்லால்,  ஜவான் படத்தில் அனிருத் இசையில் வெளியான ஷாருக்கானின் ஜிந்தா பந்தாமற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும்ஆகிய இரண்டுக்கும் நடனமாடினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் மோகன்லாலுக்கும் சக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கும் இடையிலான இதயத்தை தூண்டும் பாசப்பிணைப்பினை பார்க்க முடிந்த்து. இந்த நிகழ்வில், மோகன்லால் அன்புடன் மம்முட்டியின் கன்னத்தில் முத்தமிட்டார், இது ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஜோஷிக்கு விருது வழங்க இருவரும் ஒன்றாக வந்தனர்.

இந்த நிகழ்வின் போது, மோகன்லால் தனது முதல் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் (1980) மற்றும் அவரது 1987 ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் படமான உன்னிகளே ஒரு கதை பராயத் படத்தின் தலைப்பு பாடலிலிருந்து "மிழியோரம்" பாடலையும் வழங்கினார். தற்போது, எல் 360  என்று பெயரிடப்பட்டுள்ள  படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் பிஸியாக இருக்கிறார். ஆபரேஷன் ஜாவா மற்றும் சவுதி வெள்ளக்கா படங்களுக்கு பெயர் பெற்ற தருண் மூர்த்தி இதை இயக்குகிறார்.

மலையாள சினிமாவின் மிகவும் பிரியமான திரை ஜோடிகளில் ஒருவரான மோகன்லால் மற்றும் ஷோபனா 15 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். நேற்று, இந்த படத்தின் பூஜை விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மொத்தம் நான்கு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் புகைப்படம், மோகன்லாலும் ஷோபனாவும் கைகுலுக்குவதை காட்டுகிறது.

மோகன்லால் கடைசியாக நடித்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் துரதிர்ஷ்டவசமாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இதனால் இவரின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mohanlal Mammootty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment