மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருப்பவர் மோகன்லால். இவரது மனைவி சுசித்ரா, திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். மோகன்லால்- சுசித்ராவுக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும், பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.
இதில், பிரணவ் மோகன்லால் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் ஹீரோவாக நடித்து இதயத்தை கொள்ளை கொண்டிருப்பார். இப்படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் கிடைத்தது. இந்நிலையில், பிரணவ் மோகன்லால், விவசாய பண்ணையில் வேலை பார்ப்பதாக அவரது தாயார் சுசித்ரா கூறியுள்ளார்.
சுசித்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், என் மகன் விவசாய பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார். ஸ்பெயின் நாட்டில் உள்ள விவசாய பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்.
தங்குமிடம், உணவு அவர்கள் வழங்குவார்கள். அதற்கு இவர் வேலை செய்கிறார். சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார். அது அவருக்கு ஒரு அனுபவமாக உள்ளது. வீடு திரும்பியதும் அங்கு கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“