நாளை முதல் மோகினி ஆட்டம்... உலகமெங்கும்!

Mohini Movie Release Date: இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது

Mohini Movie Release Date: இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாளை முதல் மோகினி ஆட்டம்... உலகமெங்கும்!

Mohini Movie Release: மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் 'மோகினி' திரைப்படம் நாளை (ஜூலை 27) ரிலீசாக உள்ளது.  'சிங்கம்-2' படத்தைத் தயாரித்த பிரின்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில், த்ரிஷா கதையின் நாயகியாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். த்ரிஷா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் படம் இதுதான்.

Advertisment

மேலும், பூர்ணிமா பாக்கியராஜ், யோகி பாபு, சுவாமிநாதன், ஆர்த்தி கணேஷ் மற்றும் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் இயக்குநர் மாதேஷ் கூறுகையில், "இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமான செலவில் உருவாக்கியுள்ளோம். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டி.என்.ஏ. தொடர்பு பற்றிய விஷயங்கள்தான் படத்தின் முக்கியமான அம்சம்.

படத்தில் 'மோகினி'யாக நடித்திருக்கும் நாயகி த்ரிஷா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் த்ரிஷா.

இப்படத்தின் VFX காட்சிகள் லண்டனில் செய்யப்பட்டது. இந்தப் படம் தமிழகம் போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. " என்றார்.

Advertisment
Advertisements

 

Trisha Mohini Movie

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: