/indian-express-tamil/media/media_files/2025/09/16/mohini-actress-2025-09-16-15-15-42.jpg)
தமிழ் சினிமாவில், ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தனது நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த நடிகை மோகினி, தனது கணவரின் உறவினர்கள் தனக்கு சூனியம் வைத்ததால் 7 முறை தற்கொலைக்கு முயன்றதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
நடிகை மோகினி சினிமாவில் நடிப்பதை நிறுத்தி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்ட போதிலும், சினிமா ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. பல திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த மறக்க முடியாத கேரக்டர்கள் தான் இதற்கு முக்கிய காரணம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ள மோகினி, தமிழில் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு புதிய மன்னர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நான் பேச நினைப்பதெல்லாம், பிரஷாந்துடன் கண்மணி, சின்ன மருமகள், ஜமீன் கோட்டை, குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட படங்கள் இவரை பற்றி அதிகம் பேச வைத்தது. நீண்ட காலமாக திரையுலகில் இருந்து விலகி இருந்த மோகினி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கையின் பல்வேறு தருணங்கள் பற்றி பேசினார். குறிப்பாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற தருணங்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசினார்.
பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறிய அவர், ஒரு ஜோதிடர் தனக்கு யாரோ சூனியம் வைத்ததாகக் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், கணவரின் உறவினர் ஒருவர் தனக்கு செய்வினை (பில்லி சூனியம்) வைத்ததே, அந்த சமயத்தில் தான் சந்தித்த பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், திருமணத்திற்குப் பிறகு, என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில், நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.
என் வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருந்தது. ஆனாலும் நான் மனச்சோர்வடைந்தேன். ஒரு கட்டத்தில், ஒருமுறை அல்ல, ஏழு முறை தற்கொலைக்கு முயன்றேன்" என்று சினிமா விகடன் நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். மன அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதைப் பற்றி பேசிய மோகினி, அந்த நேரத்தில், ஒரு ஜோதிடர் எனக்கு சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். முதலில் நான் அதை கேலி செய்தேன். ஆனால் பின்னர், நான் ஏன் தற்கொலை செய்யத் துணிந்தேன் என்று யோசித்தேன். அந்த உண்மையை உணர்ந்த பின்னரே, அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கத் தொடங்கினேன்.
என்னை அதிலிருந்து மீட்டது என் இயேசுதான் என்று கூறியுள்ளார். பிராமண குடும்பத்தில் பிறந்த மோகினி, 2006-ல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் இறப்பதைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தேன். எல்லாம் இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது என்று தொடர்ந்து யோசித்தேன். என் கணவரின் உறவுக்காரப் பெண் ஒருவர் செய்த செய்வினைதான் என் இந்த நிலைக்குக் காரணம். இயேசுவின் மீதான என் நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றியது" என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டு தசாப்தங்கள் நீடித்த மோகினியின் நடிப்புப் பயணத்தில், தமிழில் சிவாஜி கணேசன், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார், விஜயகாந்த், விஷ்ணுவர்தன், விக்ரம், ரவிச்சந்திரன், சரத்குமார், மோகன் பாபு, சுரேஷ் கோபி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் பணியாற்றியுள்ளார். இந்தியில் 'டான்சர்' (1991) என்ற படத்திலும் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us