அலிசியா கையில் ப்ரொஃபெஸர்; டமாயாவுடன் பேசும் ரக்கேல் - மனி ஹேய்ஸ்ட் சீசன் 5 எப்படி இருக்கிறது?

Spoiler alert : எம்.ஐ.டியில் இன்ஜினியரிங் படித்த பெர்லினின் மகன் ரஃபேல் இந்த சீசனில் புதுவரவாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Spoiler alert : எம்.ஐ.டியில் இன்ஜினியரிங் படித்த பெர்லினின் மகன் ரஃபேல் இந்த சீசனில் புதுவரவாக சேர்க்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Money heist season 5 part 1 review

Cast : Álvaro Morte, Úrsula Corberó, Itziar Ituño, Jaime Lorente, Esther Acebo, Darko Perić, Rodrigo de la Serna, Belén Cuesta, Najwa Nimri

Direction : Álex Pina

Season 5, Part 1

Advertisment

Money Heist season 5 : நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டில் அதிகப்படியான மக்களை கவர்ந்த ஒரு சீரிஸாக இருந்து வருகிறது மணி ஹெய்ஸ்ட். இதில் வரும் ப்ரொஃபெஸர், இங்கு பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு கதாப்பாத்திரம். சீசன் நான்கில், இந்த குழுவில் அனைவராலும் நேசிக்கப்படும் நைரோபி உயிரிழக்க, ப்ரொஃபெஸரின் மனைவி லிஸ்பான் (ரெக்கேல்) பேங்க் ஆஃப் ஸ்பெயினுக்குள் நுழைகிறார். அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி, அலிசியா ப்ரொஃபெஸர் இந்த மாஸ்டர் ப்ளானை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்த இடத்தை கண்டறிந்து அங்கே செல்வதோடு முடிவு பெற்றது.

பேங்க் ஆஃப் ஸ்பெயினில் இருக்கும் தங்கம் அனைத்தும் உருக்கி வெளியேற்றப்படுமா, ப்ரொஃபெஸரின் குழு அந்த வங்கியில் இருந்து முழுமையாக தப்பிக்குமா என்ற கேள்விகளுடன் ஆரம்பமாகிறது சீசன் 5-ன் பகுதி ஒன்று. சீசன் 5 பகுதி ஒன்றில் மொத்தம் 5 எபிசோட்கள் மட்டுமே இருக்கின்றது என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இந்த இணைய தொடரின் கடைசி பாகமாக வெளியாகிறது சீசன் 5. இந்த சீசன் 5-ல் பாகம் இரண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

எப்போதும் ப்ளான் B-யுடன் இருக்கும் ப்ரொஃபெஸர் இம்முறை அலிசியாவின் கைகளில் சிக்கும் போது, தப்பிச் செல்வதற்கான மாற்று வழி எதையும் வைத்திருக்கவில்லை. காவல்துறை அதிகாரியின் கையில் அவர் சிறைபட, வெளியுலகில் நடப்பது எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் வங்கிக்குள் சிக்கிக் கொண்டனர் மற்ற கொள்ளையர்கள்.

ப்ளான் பாரீஸ் முடிவுக்கு வந்தது என்று ரக்கேல் அல்வரோ மோர்ட்டேவிடம் தெரிவிக்கும் போது அடுத்த திட்டம் என்ன என்ற பரபரப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது. ஆனால் அடுத்து என்ன? கொள்ளை அடிக்க சென்ற குழுவினருக்கு கையில் இருப்பது எல்லாம் ஒரே ஒரு துருப்புச் சீட்டு தான். அந்த வங்கி ஆளுநரின் பாதுகாப்பு பிரிவில் இருக்கும். கண்டியா. அவரை வைத்து காய்களை எப்படி நகர்த்துகிறார் ரக்கேல்? அலிசியாவின் பிடியில் இருந்து தப்பினாரா ப்ரொஃபெஸர்? பெர்லினின் மகனாக அறிமுகமாகும் ரஃபேல் மற்றும் டோக்கியோவின் முன்னாள் காதலன் ரனே ஆகியோர் இந்த குழு பேங்க் ஆஃப் ஸ்பெய்னில் இருந்து தப்பிக்க உதவுவார்களா என்பதெல்லாம் சீரிஸை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Review

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: