பகுத்தறிவு என்றால் என்ன தெரியுமா? - ஆர்.ஜே.பாலாஜிக்கு பதிலளித்த 'மூடம் கூடம்' நவீன்!

95% பெரியாரின் ஆதரவாளர்கள் நாத்திகர்கள் இல்லை

ஆர்.ஜே.வாக இருந்து டப்பு டப்பு டப்பு வென இன்று படத்தின் நாயகனாக வளர்ந்து நிற்பவர் பாலாஜி. அதான், ஆர்.ஜே.பாலாஜி. நிறைய படங்களில் காமெடி ரோல்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படம் இவரை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது. கடந்த பிப்.22-ம் தேதி வெளியான இப்படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களிலேயே அனைத்து தரப்புக்கும் லாபத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில், படம் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், அதற்கான ப்ரமோஷன் வீடியோவையும் ஆர்ஜே பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் ”சாமி கும்பிடு, பூஜையைப் பண்ணு. ஆனால், அதை வீட்டுக்குள்ளேயே முடிச்சுக்கோ. வெளியில் இவர்களைத்தான் கும்பிடணும்” என்று ப்ரியா ஆனந்த் ஆர்ஜே பாலாஜிக்கு அறிவுரை கூறுவார். சுவரில் பெரியார், காந்தி, காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் இருக்கும். சாமி படங்களை அகற்றிவிட்டு பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களின் படங்களைக் கும்பிடுவது மட்டுமே பகுத்தறிவு என்ற வசனம் இடம் பெற்றுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த ப்ரமோஷன் வீடியோவைக் குறிப்பிட்டு, ”#LKG வெற்றிக்கு வாழ்த்துகள் சகோ @RJ_Balaji. ஆனால் வீட்டிற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு. ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மண்ணில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95% பெரியாரின் ஆதரவாளர்கள் நாத்திகர்கள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close