மூக்குத்தி அம்மன்: முழுப் படத்தையும் ஆன்லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

TamilRockers vs Mookuthi Amman: சமூக ஊடகங்கள் மூலமாக தமிழ் ராக்கர்ஸ் தனது புதிய முகவரியை பறிமாறி, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

By: Updated: November 14, 2020, 10:19:54 AM

Mookuthi Amman Full Movie Leaked To Free Download By TamilRockers: தீபாவளி ரிலீஸான மூக்குத்தி அம்மன் முழுப் படத்தையும் ஆன்லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். தொடர்ந்து தியேட்டர்களில் வெளியான புதிய படங்களை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், ஓடிடி-யில் வெளியாகும் படங்களையும் விட்டு வைக்கவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பல ஆண்டுகளாகவே சினிமாத் துறைக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தியேட்டர்களில் வெளியான படங்களை சில மணி நேரங்களில் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், இப்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகும் படங்களையும் திருடி வருகிறது.

TamilRockers vs Mookuthi Amman: மூக்குத்தி அம்மன் படத்தை ஆன்லைனில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை மிக விரைவாக, அதே ஹெச்.டி தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுவது வெளியீட்டாளர்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தையும் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

அதேபோல தீபாவளி தினமான சனிக்கிழமை (நவம்பர் 14) அதிகாலையில் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஆர்.ஜே பாலாஜி இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த படம்.

அதிரடி வசனங்கள், காமெடி கலந்த இந்தப் படம் குடும்ப ஆடியன்ஸை குறி வைத்து எடுக்கப்பட்டது. தீபாவளியையொட்டி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெருமளவில் ரசிகர்களை ஈர்க்கும் நோக்கில் சனிக்கிழமை இந்தப் படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்குள் தமிழ் ராக்கர்ஸும் திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்திருப்பதுதான் ஷாக். டெலகிராம் மற்றும் சில பைரசி வெப்சைட்களும் மூக்குத்தி அம்மனை திருட்டுத்தனமாக வெளியிட்டன.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இப்படி தொடர்ந்து தனது முகவரிகளை மாற்றிக்கொண்டு புதுப்படங்களை வெளியிடுவதை திரைத்துறையினரால் தடுக்க முடியவில்லை. ஓடிடி பிசினஸை கையில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் இதில் என்ன செய்வது? எனப் புரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றன.

சில சமூக ஊடகங்கள் மூலமாக தமிழ் ராக்கர்ஸ் தனது புதிய முகவரியை பறிமாறி, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mookuthi amman full movie leaked to free download tamilrockers vs mookuthi amman

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X