Mookuthi Amman vs Tamilrockers: தியேட்டர்களில் ரிலீசான திரைப்படங்களை சற்றே சிரமப்பட்டு சுட்டுக்கொண்டிருந்த தமிழ் ராக்கர்ஸுக்கு, இப்போது ஓடிடி-யில் வெளியாகும் படங்களை திருடுவதில் பெரிய சிரமம் இல்லை. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் படம் வெளியாகும் முன்பே அல்லது படம் வெளியாகி சில நிமிடங்களில் அதே தரத்தில் முழுப் படத்தையும் தங்கள் இணையதளங்களில் வெளியிடுகின்றன பைரசி வெப்சைட்டுகள்.
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இந்த பைரசி வெப்சைட்களின் லேட்டஸ்ட் குறி, மூக்குத்தி அம்மன். நடிகை நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இது. அடுத்தடுத்து இரு ஸ்னீக் பீக் வெளியாகி இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
TamilRockers Threats To Mookuthi Amman: தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலில் மூக்குத்தி அம்மன்
தீபாவளி தினமான நவம்பர் 14-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை அதிகாலை அல்லது வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்தப் படம் வெளியாகும் என்பதே இதன் அர்த்தம்.
அதிரடியான வசனங்களுடன் நயன்தாராவின் ஆக்ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜியின் காமெடிக் காட்சிகள் இதை ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராகவும் நிறுத்தும் என நம்பலாம்.
தியேட்டர்களில் வெளியாகும் படங்களைப் போல, ஓடிடி-யில் வெளியாகும் படங்களுக்கு கலெக்ஷன் கணக்கு எதுவும் இல்லை. எனினும் பெரும் தொகை கொடுத்து ஓடிடி-யில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் அடுத்த படங்களை அதிக விலைக்கு வாங்க முன்வரும்.
ஆனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் ஓடிடி-யில் வெளியாகும் படங்களை சில நிமிடங்களில் திருடி தங்கள் இணையதளங்களில் வெளியிடுவதால், ஓடிடி நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கின்றன. இதனால் அடுத்தடுத்த படங்களுக்கு விலை கிடைக்காது.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மூக்குத்தி அம்மனும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் மிரட்டலுக்கு இலக்காகியிருக்கிறது. இது போன்ற பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் முறையான வழியில் அந்தப் படத்தை பார்க்க வாய்ப்பாக இருக்கும்.
அடிக்கடி முகவரியை மாற்றிக்கொண்டு, சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பித்து வரும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் இந்த வேலையை விடுவதாக இல்லை. தமிழ் ராக்கர்ஸ் முகவரியை உலவவிடும் சமூக வலைதளங்கள் மீது கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.