அடேங்கப்பா… இந்த வாரம் இத்தனை படம் ரிலீஸ் ஆகுதா?

கார்த்தியின் ’தம்பி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ ஆகிய படங்கள்  டிசம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

December release 2019
December release 2019

December Release Movies : இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 200-க்கும் குறைவாகவே உள்ளது. இந்தாண்டு முடிவடைய இன்னும் மூன்று வெள்ளிக்கிழமைகள் மீதமுள்ள நிலையில், தமிழ் சினிமா 2019-ம் ஆண்டு டபுள் சென்சுரி அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுவாரஸ்யமாக, வரும் வெள்ளிக்கிழமை 11 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

காளிதாஸ், சாம்பியன், கேப்மாரி, திருப்பதி சாமி குடும்பம், கருதுக்களை பதிவு செய், சென்னை 2 பாங்காக், கைலா, 50 ரூவா, தேடு, மெரினா புரட்சி, மங்குனி பாண்டியர்கள் ஆகியப் படங்கள் இந்த வாரம் வெளியாகிறது. தர்பார் மற்றும் பிற பொங்கல் வெளியீடுகள் 2020 ஜனவரியில் வருவதால், சிறிய படங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட்டு விட முயற்சி செய்து வருகிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.

கார்த்தியின் ’தம்பி’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ ஆகிய படங்கள்  டிசம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. அதே நாளில் ஜீவாவின் ‘சீறு’, ஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகியப் படங்களும் வெளியாவதாக தெரிகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.  டிசம்பர் 13-ஆம் தேதி திரைக்கு வரும் படங்களில், ’கேப்மாரி’ மற்றும் ’காளிதாஸ்’ ஆகியப் படங்களின் முறையே ஜெய் மற்றும் பாரத் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்டிருக்கின்றன. முந்தையது ரோம்-காம், அடுத்தது க்ரைம் த்ரில்லர். அதோடு நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘மெரீனா புரட்சியும்’ ஓரளவுக்கு எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது.

இது அத்தனையும் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகுமா, என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: More than 10 tamil films release capmaari kaalidas

Next Story
ஆன்மீகமா? ஆன்மீக அரசியலா? – நயன்தாராவை துரத்தும் அரசியல் சர்ச்சைnayanthara temple visits vignesh sivan mookuthi amman thiruchendur - ஆன்மீகமா? ஆன்மீக அரசியலா? - நயன்தாராவை துரத்தும் அரசியல் சர்ச்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express