/indian-express-tamil/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-175115-2025-09-01-17-51-40.jpg)
தென்னிந்திய சினிமாவில் தன் தனித்துவமான நடிப்பும், அழகும், கேரிஸ்மாவும் மூலம் மிகப்பெரிய ரசிகர் வரிசையை உருவாக்கியவர் நடிகை நயன்தாரா. சிறந்த கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், இன்று முன்னணி ஹீரோக்களுக்கு சமமாகவே உயர்ந்த சம்பளம் பெற்றுவரும் நடிகையாக பரவலாக அறியப்படுகிறார். இன்று நயன்தாரா, வெறும் ஒரு நடிகை மட்டுமல்ல; தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகைகளில் ஒருவராகவும் திகழ்கிறார்.
கணவர், குழந்தைகள் என திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்தாலும் சினிமாவிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். ஆத்துமட்டுமில்லாமல் வெவ்வேறு பிசினஸில் முதலீடு செய்து அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.
இவர் முதலீடு செய்துள்ள சொத்துகள், வாங்கியுள்ள விலையுயர்ந்த வாகனங்கள், அணிகலன்கள், ப்ராண்டெட் ஆடைகள், பங்குகள் மற்றும் வணிக முயற்சிகள் என பல வகையான வளங்களை கையாண்டு வருகின்றார். ஒரு சாதாரண நடிகையிலிருந்து, ஒரு சுயாதீனமான தொழிலதிபர் பெண்மணியாக மாறியுள்ள நயன்தாராவின் இந்த வாழ்க்கை யாத்திரை, பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.
அப்படியென்றால், நயன்தாரா வைத்திருக்கும் விலை உயர்ந்த சொத்துகள் என்னென்ன? அவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? என்பதை விரிவாக அறிந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா, சென்னை, கேரளா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தன் சொந்த வீடுகளை வைத்திருக்கிறார். இந்த வீடுகளின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடிக்கு மேல் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கூடுதலாக, ஹைதராபாதில் மட்டும் இரண்டு அப்பார்ட்மெண்ட்கள் உள்ளதாகவும், அவை சேர்த்து சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புடையதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் சொந்த பிரைவேட் ஜெட்டைப் பெற்றிருக்கும் சில பிரபலங்களில் நயன்தாராவும் முக்கியமாக இடம்பெறுகிறார். நாடின் எந்த பகுதியில் சென்றாலும், பொதுவாக தனது தனிப்பட்ட ஜெட்டில் பயணிக்க விருப்பம் கொள்வதாக தெரிகிறது. இந்த பிரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாயை கடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா பல்வேறு பிரபல பிராண்டுகளின் சொகுசு கார்கள் கொண்ட ஒரு சிறந்த கார் சேகரிப்பை (car collection) வைத்துள்ளார். அவருடைய கார் பட்டியலில் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, ஃபோர்டு எண்டெவர், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மெர்சிடிஸ்-மாய்பக் ஜிஎல்எஸ் 600 போன்ற வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. இவையெல்லாமே சொகுசாக இருந்தாலும், இந்த பட்டியலில் மிகவும் விலை உயர்ந்தது மெர்சிடிஸ்-மாய்பக் ஜிஎல்எஸ் 600 கார் தான். இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாயைத் தாண்டும் என கூறப்படுகிறது.
நயன்தாரா, 9 ஸ்கின் என்ற சரும பராமரிப்பு நிறுவனத்தை இயங்க வைப்பதில் முன்னனி. அதேபோல், பெமி 9 என்ற சானிட்டரி பேட் நிறுவனத்தையும் அவர் நடத்துகிறார். இந்த இரண்டு நிறுவனங்களின் மூலம் அவர் கோடிக்கணக்கான வருமானத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
நடிகையாக ஜோலித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திரைப்படத்திலும் தொழிலிலும் முன்னணி நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. தற்போது அவர் தென்னிந்தியத்துடன் சேர்த்து ஹிந்தி சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.