/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-40.jpg)
mouna ragam serial hotstar
mouna ragam serial hotstar : விஜய் டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகும் மெளன ராகம் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சீரியலை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
சீரியல் என்றால் மாமியார் - மருமகள் சண்டை, வெட்டுக்குத்து, சூழ்ச்சி, கொடுமை என காட்டிய எத்தனையோ மெகா சீரியலில் இருந்து அப்படியே விலகி நிற்கிறதது மெளன ராகம். சொந்த மகள் என்று தெரியாமல் பாசத்தை பொழியும் பாடகராக கார்த்திக். அவர் தான் அப்பா என்று தெரிந்தும் உண்மையை மறைத்துக் கொண்டு தினம் தினம் தனியாக அழும் செல்லமகள் சக்தி. ஆரம்பத்தில் ஆணாக வேடமிட்டு கொண்டிருந்த சக்தி இப்போது பெண் வேடத்தில் நடிப்பில் அசத்தி வருகிறார். கணவனை விட்டுக் கொடுக்க முடியாமல் கோபத்தை கொடூரமாக காட்டும் மிகச் சிறந்த வில்லி ரோலில் காதம்பரி.
பாடல்கள் தொடங்கி கதையம்சம் நடிகர்கள் தேர்வு வரை மெளன ராகத்தில் எல்லாமே பெஸ்ட் தான். நேற்று சக்தி தான் கார்த்திக்கின் உண்மையான மகள் என்ற உண்மை தெரியாமல் இருந்த காதம்பரிக்கு மல்லிகா, சக்தி கதை எல்லாமே தெரிந்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கத்துக்கிறார் புலம்பி தள்ளுகிறார் காதம்பரி.
naam iruvar namakku iruvar : தேவியின் ஆசையை நிறைவேற்ற களத்தில் இறங்கியிருக்கும் மாயன் முதலில் கையில் எடுத்தது தேவியின் சின்ன வயசு பொம்பை, அவர் அணிந்த டீ ஷார்ட் போன்றவற்றை தான். இதெல்லாம் பார்த்து சந்தோஷப்படும் தேவிக்கு மாயன் கொடுத்த மிகப் பெரிய பரிசு தேவியின் அப்பா அவருக்கு எழுதிய கடிதம் தான்.
கண்ணான கண்ணே. நீ கலங்காதடி. ????
நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று மாலை 6:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #NINI#VijayTelevisionpic.twitter.com/SVeM79JhO3— Vijay Television (@vijaytelevision) September 24, 2019
அப்பா என்றாலே வெறுப்பு, அப்பாவுக்கு தாமரை என்ற மகள் இருப்பது தெரிந்து ஒட்டு மொத்தமாக வெறுத்து ஒதுக்கும் தேவிக்கு அவரின் அப்பா இதுவரை சொல்ல நினைத்த அனைத்தையும் கடிதமாக எழுதி வைத்திருக்கிறார். அதை தேவிக்கு வழங்கி உண்மையை தெளிவுப்படுத்துகிறார் மாயன். இனிவரும் நாட்களில் இந்த ஆனந்த தருணத்தை தான் பார்க்க போகிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.