mouna ragam serial songs mouna ragam hotstar: விஜய் டெலிவிஷனில் ஒளிப்பரப்பான மெளன ராகம் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக இருந்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சீரியலை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
சீரியல் என்றால் மாமியார் – மருமகள் சண்டை, வெட்டுக்குத்து, சூழ்ச்சி, கொடுமை என காட்டிய எத்தனையோ மெகா சீரியலில் இருந்து அப்படியே விலகி நிற்கிறதது மெளன ராகம். சொந்த மகள் என்று தெரியாமல் பாசத்தை பொழியும் பாடகராக கார்த்திக். அவர் தான் அப்பா என்று தெரிந்தும் உண்மையை மறைத்துக் கொண்டு தினம் தினம் தனியாக அழும் செல்லமகள் சக்தி. ஆரம்பத்தில் ஆணாக வேடமிட்டு கொண்டிருந்த சக்தி பின்பு பெண் வேடத்தில் நடிப்பில் அசத்தினார். கணவனை விட்டுக் கொடுக்க முடியாமல் கோபத்தை கொடூரமாக காட்டும் மிகச் சிறந்த வில்லி ரோலில் காதம்பரி.
பாடல்கள் தொடங்கி கதையம்சம் நடிகர்கள் தேர்வு வரை மெளன ராகத்தில் எல்லாமே பெஸ்ட் தான். சக்தி தான் கார்த்திக்கின் உண்மையான மகள் என்ற உண்மை தெரியாமல் இருந்த காதம்பரிக்கு மல்லிகா, சக்தி கதை எல்லாமே தெரிந்து விட்டது. ஏகப்பட்ட பிரச்சனைகள் சோதனைகளுக்கு பிறகு மல்லிகாவும், சக்தியும் கார்த்திக் கிருஷ்ணாவை விட்டு பிரிந்து செல்கின்றனர்.
ஸ்ருதி, காதம்பரி உடன் கார்த்திக் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் அன்பு கோரிக்கை. இப்போது மெளன ராகத்தின் 2 ஆவது சீசன் இனிதே ஆரம்பமானது. கதை ஒளிப்பரப்ப தொடங்கிய 2 ஆவது நாலே சூடுப்பிடித்து விட்டது.
???? ஆஹா! #MounaRaagam #VijayTelevision pic.twitter.com/PgI1cl91dW
— Vijay Television (@vijaytelevision) February 3, 2021
ஒரு கச்சேரிக்காக ஊருக்கு வரும் கார்த்திக், அங்கு சக்தியை சந்திக்கிறார். இருவரும் இணைந்து பாடம் போகிறார்கல். அடுத்த என்ன?