Advertisment

மழையின் காதலியாக மாறிய சீரியல் நடிகை... என்னா டான்ஸ்?!

Mounaraagam serial actress raveena daha rain dance viral video: மௌனராகம் சீரியல் நடிகை ரவீணா இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ; மழையில் நனைந்தவாறே செம டான்ஸ்

author-image
WebDesk
New Update
மழையின் காதலியாக மாறிய சீரியல் நடிகை... என்னா டான்ஸ்?!

மௌனராகம் சீரியல் நடிகை ரவீணா மழையில் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Advertisment

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று மௌனராகம். இந்த சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் சீசனில் குழந்தையாக இருந்த சக்தி தற்போது, திருமண வயதுள்ள பெண்ணாக மாறிவிட்டாள்.

மௌன ராகம் சீரியலில் ராஜீவ் பரமேஸ்வர், ஷமிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். முதல் சீசனில் சக்தியாக கிருத்திகா நடித்திருந்தார். தற்போது இரண்டாவது சீசனில் சக்தியாக ரவீணா தாஹா நடித்து வருகிறார். ரவீணா ராட்ச்சன் திரைப்படத்தில் நடித்தவர்.

சீரியலில் இப்போது தான் சக்தி மற்றும் வருண் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. நிஜத்தில் 17 வயது பெண்ணான ரவீணாவுக்கு சீரியலில் திருமணம் நடந்துள்ளதை, குழந்தை திருமணம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரவீணா, அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ரவீணா தற்போது, கொட்டும் மழையில் நனைந்தவாறு டான்ஸ் ஆடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் அவர் ‘பானி பானி’ என்ற ஹிந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். மற்றொரு வீடியோவிலும் மழையில் நனைந்துக் கொண்டே ‘மழை வருதே’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோக்களை நெட்டிசன்கள் லைக் செய்து வருகின்றனர். மேலும் ’மழையில் ஆடும் மயிலே’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Instagram Video Mouna Raagam2 Vijay Tv Actress Raveena Taha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment