மிஸ்டர் லோக்கலாக மாறிய சிவகார்த்திகேயன்!

இந்தப் படத்தின் போஸ்டரில் கறுப்பு காஸ்ட்யூமில், கையில் அரை கிளாஸ் டீயுன் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார் சிவா

Mr. Local Movie First Look Poster : சீமராஜா திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் எம்.ராஜேஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார். வேலைக்காரனுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாகியிருக்கிறார் நயன்தாரா. ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார்.

Mr. Local Movie First Look Poster :

இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப் படாத நிலையில், SK13 என்றே படக்குழுவினர் இதனைக் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இதன் டைட்டிலோடு சேர்த்து, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ’Mr.லோக்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டரில் கறுப்பு காஸ்ட்யூமில், கையில் அரை கிளாஸ் டீயுன் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார் சிவா. தற்போது இந்த போஸ்டர் அவரது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தவிர, ’இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமாரின் SK14, ’இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரனின் SK15 ஆகியப் படங்கள் சிவாவின் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close