Mr.Local review : லோக்கல் கை சிவகார்த்திகேயன்! கிளாஸான நயன்..படத்தை பார்த்த ரசிகர்களின் கருத்து.

முந்தைய படங்களை போல் சீமராஜா சிவாக்கு கைக்கொடுக்கவில்லை.

Mr.Local movie review : வேலைக்காரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் முதல் காட்சி இன்று காலை 6.30 மணிக்கு திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் யோகிபாபு, ராதிகா சரத்குமார், சத்தீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். ராஜேஷ் இயக்கியுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் இல்லாமல் இந்த படம் உருவாகியுள்ளது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் நடித்திருந்த கதாபாத்திரம் போல ஒரு பவர் ஃபுல் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் வில்லி கிடையாது. சிவகார்த்திகேயன் துரத்தி காதல் வலை வீசும் நாயகியாக நயன் வருகிறார்.

கடந்தாண்டு சிவா நடிப்பில் வெளிவந்த சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்தும் முந்தைய படங்களை போல் சீமராஜா சிவாக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அடுத்த முயற்சியாக சிவா மிஸ்டர் லோக்கல் படத்தை தேர்வு செய்தார்.

சிவாவுக்கு குட்டீஸ் ரசிகர்கள் ஏராளம். விஜய், அஜித் படத்திற்கு பிறகு சிறுவர்கள் அதிகமாக சிவாவை ரசிக்கின்றனர். இதனால் அவர்களை குதூக்கலப்படுத்தும் வகையில் படத்தில் நிறைய காட்சிகள், காமெடி சரவெடிகள் இருக்கும் என்று சிவா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close