’மிஸ்டர் லோக்கல்’ தோல்விப் படம் தான் - மனம் திறந்த சிவகார்த்திகேயன்

நிற்கிறோமா என்பது தான் அங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

நிற்கிறோமா என்பது தான் அங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivakarthikeyan, mr local is a failure one

நடிகர் சிவகார்த்திகேயன் ‘கனா’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருந்தார்.

Advertisment

அவருடைய எஸ்.கே புரொடக்‌ஷன்ஸின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’.

இந்தப் படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ரியோ ஹீரோவாக அறிமுகமாகிறார். ஷிரின் கஞ்ச்வாலா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

ராதா ரவி, நாஞ்சில் சம்பத், விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

Advertisment
Advertisements

நேற்று இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னை இயக்கும் சக்தியாக விளங்கும் ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு வெற்றி கிடைத்தால் அதற்கு பின்புலமாக ஒரு டீம் இருக்கும். ஆனால் தோல்வியைத் தழுவினால் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறேன். அதே சமயம் தனியாக நிற்பதும், குழுவாக நிற்பதும் ஒரு மேட்டரே இல்லை. நிற்கிறோமா என்பது தான் அங்கு கவனிக்க வேண்டிய விஷயம். ஆம் நான் நிற்கிறேன்!

மிஸ்டர் லோக்கல் தோல்விப் படமாகிவிட்டது. அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் நான் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் ரசிகர்கள் என்ஜாய் பண்ணும் வகையிலும், உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கும் என உறுதியளிக்கிறேன்” என்றார்.

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை சிவகார்த்திகேயனே தோல்விப் படம் எனக் கூறியது தான் ரசிகர்களின் தற்போதைய ஹாட் டாக்!

Tamil Cinema Nayanthara Siva Karthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: