Mr Local Trailer: ’சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற ரொமாண்டிக் காமெடி படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ்.
Advertisment
இவர் தற்போது ’மிஸ்டர் லோக்கல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி.
ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
Advertisment
Advertisements
தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. காமெடியன்கள் இருந்த போதிலும், காமெடி ரொமான்ஸ் என இரண்டையும் சிவகார்த்திகேயன் பேலன்ஸ் செய்யும்படி படம் இருக்கும் எனத் தெரிகிறது.
ஆணவம், திமிர், பிடிவாதம் ஆகிய குணங்களோடு நயன்தாரா நடித்திருக்கிறார்.
தற்போது இதனை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்