Mrs and Mr Movie Review: அடல்ட் காமெடி வெற்றிக்கு கை கொடுத்ததா? வனிதாவின் மிஸஸ் அண்ட் மிஸ்டர் விமர்சனம்!

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அடல்ட் காமெடியாக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அடல்ட் காமெடியாக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார்.

author-image
WebDesk
New Update
Mrs and Mr Movie Review Vanitha Vijaykumar Jovika Robert Master Tamil News

தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அவர் தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். 

Advertisment

அந்த வகையில், பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே, தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தில், நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீமன் ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை, வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படம் அடல்ட் காமெடியாக வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் கதைப்படி ஷகீலாவின் மகளான வனிதா, ராபர்ட்டை திருமணம் செய்துகொள்கிறார். இதில் ராபர்ட் குழந்தையே பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையே வேஸ்ட் என்று வனிதாவை தோழிகள் சிலர் தூண்டிவிடுகிறார்கள். இதனால், 40 வயதில் இருக்கும் வனிதா தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். 

Advertisment
Advertisements

ஆனால், கணவர் ராபர்ட் வேண்டாம் வனிதாவை புறக்கணிக்கிறார். இதனால் இவர்கள் இருவரிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். ராபர்ட் ஏன் தனக்கு குழந்தை வேண்டாம் என்கிறார், வனிதாவும் ராபர்ட்டும் மீண்டும் சேர்ந்தார்களா? அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை. 

இப்படத்தை வனிதா விஜயகுமார் இயக்கி இருக்கும் நிலையில், ஒரு பெண்களின் உளவியலை மிகவும் எதார்த்தமான புரிதலோடு கையாண்டு இருக்கிறார். சில துணிச்சலான விஷயங்களையும் அடல்ட் காமெடி ஜானரில் சற்று நகைச்சுவையாக முயற்சி செய்திருக்கிறார்கள். இப்படத்தை பெரும்பாலும் பாங்காக்கில் தான் எடுத்துள்ளார்கள். அதனால் அங்குள்ள கலாச்சாரம், அவர்கள் அணியும் உடை என ஒரு புதுவிதமான கதையுலகத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கொரியன் டிராமா பார்க்கும் அனுபவத்தை இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் ஏற்படுத்துகிறது.

கதை சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் வனிதா. குறிப்பாக படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களின் கேரக்டர் ஸ்ட்ராங் ஆனதாக இல்லாதது பெரும் ஏமாற்றம். ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை சற்று கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக சிவராத்திரி பாடல் கிளுகிளுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் என தொழில் நுட்ப ரீதியாக பேசும்படியாக இல்லை. ஆர்த்தி, ஷகீலா, கிரண் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்துள்ளனர். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டரை இன்னும் சூப்பர் ஹிட் அடித்திருக்கும். 

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: