ஒரு படம் நடிச்சா, ரெண்டு படம் ஃப்ரீனு ஆஃபர் கொடுத்தேன்; ஆனா யாருமே கண்டுக்கல: தேசிய விருது பெற்ற நடிகர் வருத்தம்!

தமிழகத்தில் நவீன நாடக நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக எம் எஸ் பாஸ்கர் இருந்தார். அதன் பின் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வந்தார்.

தமிழகத்தில் நவீன நாடக நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக எம் எஸ் பாஸ்கர் இருந்தார். அதன் பின் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வந்தார்.

author-image
WebDesk
New Update
ms bhaskar

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். நகைச்சுவையான கதாபாத்திரம் மட்டுமின்றி எமோஷனலான ரோல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.  தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள பார்க்கிங் படத்தில் முக்கியமான ரோலில் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

Advertisment

எம்.எஸ்.பாஸ்கர் கடந்த 1957 -ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். தமிழகத்தில் நவீன நாடக நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக எம் எஸ் பாஸ்கர் இருந்தார். அதன் பின் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வந்தார்.

நடக கலைஞராக இருந்த எம் எஸ் பாஸ்கர், கடந்த 1987 -ம் ஆண்டு வெளியான "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 90 களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த எம் எஸ் பாஸ்கருக்கு "எங்கள் அண்ணா" திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. எம் எஸ் பாஸ்கர் "மொழி" படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும், 2017 ஆண்டு வெளிவந்த "8 தோட்டாக்கள்" படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார் .

எம்.எஸ்.பாஸ்கர் ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கலைஞராக உள்ளார். அவரது மகன் ஆதித்யா பாஸ்கர் 96 படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். 

Advertisment
Advertisements

இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராகயாக இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார். இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவருக்கு நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாம். அபப்டி ஒரு பழைய நேர்காணலில் பேசியபோது, "நான் அண்ணாவுடன் நடிப்பதற்கு எங்கியுள்ளேன். எனக்கு ரொம்ப நாள் ஆசை அது. நிறைய இயக்குனர்களை விடியற்காலையில் எழுப்பி வாய்ப்பி கேட்டிருக்கிறேன். ஒரு படம் நடித்தால் இரண்டு படம் பிரீ என்றெல்லாம் கூறியிருக்கிறேன். ஆனால் சான்ஸ் கிடைத்ததே இல்லை. அதன் பிறகு தான் தசாவதாரம் படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. நான் ஷூட்டிங்கில் அண்ணாவை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் வந்தது என்னமாய் ஒரு வெள்ளை காரர். எனக்கு அடையாளமே தெரியவில்லை. அவர் என்னிடம் வந்து வா போலாம் என்று கூறி அழைத்து சென்றார்" என்று பகிர்ந்துள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: