96 ராம் கேரக்டர், என் மகனை பார்த்து பாவமா இருந்துச்சு: மனம் திறந்த எம்.எஸ்.பாஸ்கர்!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , த்ரிஷா ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் 96. அந்த திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் நடித்திருப்பார். அதை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் எம்.எஸ். பாஸ்கர்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , த்ரிஷா ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் 96. அந்த திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் நடித்திருப்பார். அதை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் எம்.எஸ். பாஸ்கர்.

author-image
WebDesk
New Update
download (1)

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். நகைச்சுவையான கதாபாத்திரம் மட்டுமின்றி எமோஷனலான ரோல்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

Advertisment

எம்.எஸ்.பாஸ்கர் கடந்த 1957 -ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். தமிழகத்தில் நவீன நாடக நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக எம் எஸ் பாஸ்கர் இருந்தார். அதன் பின் தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வந்தார்.

நாடக கலைஞராக இருந்த எம் எஸ் பாஸ்கர், கடந்த 1987 -ம் ஆண்டு வெளியான "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரை தொடர்ந்து அவரது பிள்ளைகள் இருவரும் இதே துறையில் களமிறங்கியுள்ளனர். அவரது மகள் திவ்யா பாஸ்கர் கோலிவுட்டிடை கலக்கும் ஒரு டாப் டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார். அதை தொடர்ந்து அவரது மகனும் 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரமாக அறிமுகமானார். 

Advertisment
Advertisements

அதை பற்றி ஒரு நேர்காணலில் அவர் பேசியுள்ளார். "அனந்த விகடன் பத்திரிக்கையில் எங்கள் குடும்ப புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அப்போது அதையடுத்து எனக்கு ஒரு நாள் இரு அழைப்பு வந்தது. சார் ஒரு படம் இருக்கிறது என்று கூறிவிட்டு, உங்களுக்கு அல்ல உங்கள் மகனுக்கு என்றார்கள். நான் சிரித்துக்கொண்டே... கேட்டு சொல்கிறேன் என்றேன். 

ஆதித்யா வீட்டிற்கு வந்ததும், இப்படி ஒரு கதை சொன்னார்கள். விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரமாம், நடிக்க ஓகே வ? என்று கேட்டேன். அவன் ஓகே சொன்னதும் அப்படியே ஷூட்டிங் சென்றுவிட்டார். இயக்குனரும் இவரது நடிப்பின் பார்த்து ஓகே செய்துவிட்டார்." என்று சிரிப்புடன் கூறினார். 

நடிப்பதற்கு எந்த பயிற்சியும் இல்லாமல் இவ்வளவு நன்றாக நடித்துள்ளார் தன் மகன் என்று ஆச்சரியப்பட்டாராம். அதே nerathil சிறு வயது கதாபாத்திரம் என்பதால் அவர் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறினார். 

"பள்ளியில் படிக்கும் மாணவன் போல இருக்க வேண்டும் என்பதால் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அந்த உடலை அப்படி செதுக்கினார். என் மகன் பட்ட கஷ்டத்தை நான் நேரில் அப்படியே பாத்தேன்" என்று அவர் எவ்வளவு அந்த படத்திற்காக உழைத்தார் என்று கூறினார். 

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை சி. பிரேம் குமார் எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஒரு காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது, இதில் பள்ளிப் பருவத்தில் காதலித்த இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது நிகழும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளைக் காட்டுகிறது. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: