/indian-express-tamil/media/media_files/1X13fdP72RvSMuoSlXwR.jpg)
Viswanathan- Ramamoorthy
தமிழ் சினிமாவின் இசை வரலாறு எம்.கே.டி., பி.யு. சின்னப்பா, சுப்பராமன், ஜி.ராமநாதன், டி.ஜி. லிங்கப்பா, சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல மேதைகளால் எழுதப்பட்டது.
அந்த இசை வரலாற்றின் இனிப்பான பெயர்தான் எம்.எஸ்.வி.
ஜூபிடர் பிக்சர்ஸ்... தமிழ் சினிமாவின் ஆலமரம். S.V. வெங்கட்ராமன், வரதராஜூலு, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் சுவாசித்த இடம் இது.
எம்.எஸ்.வியின் தாய் மாமன் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், எம்.எஸ்.விக்கு அங்கு வேலை கிடைத்தது. S.M. சுப்பையா நாயுடுவிடம், இசை உதவியாளனாய் சேர்ந்தார் எம்.எஸ்.வி.
பல போராட்டங்களுக்குப் பிறகு, சென்னையில் இசையமைப்பாளர் C.R. சுப்பராமனிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து, எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த "ஜெனோவா" படத்திற்கு, இசையமைப்பாளர் வாய்ப்பு எம்.எஸ்.விக்குக் கிடைத்தது. இதில் சிறப்பாகப் பாடல்கள் அமைத்திருந்தார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வியின் இசை அமைக்கும் வேகம், தயாரிப்பாளர்களை அவர் பக்கம் திருப்பியது.
இசையமைப்பாளர் சுப்பராமனிடம் மற்றொரு உதவியாளரான ராமமூர்த்தியிடம், எம்.எஸ்.விக்கு எப்போதுமே ஒரு மரியாதை.
அபாரமாக வயலின் வாசிக்கும் திறமைகொண்ட ராமமூர்த்தி, எம்.எஸ்.வியிடம் இணைய, விஸ்வநாதன் – ராமமூர்த்தி காம்போ, தமிழ் சினிமாவின் இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட வைத்தது.
மூத்தவரான ராமமூர்த்தி பெயரை வைக்க வேண்டும் என விரும்பிய விஸ்வநாதன், ராமமூர்த்தி-விஸ்வநாதன் என்று சொல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நீ சின்ன பையன், நீ விழுந்தாலும் மூத்தவரான ராமமூர்த்தி உன்னைத் தாங்கிப் பிடிப்பார் என்று சொல்லி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்ற பெயரைஅவர்களுக்குச் சூட்டினார்.
நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன சித்ரா லட்சுமணன் தனது டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.