தமிழர்களின் வாழ்க்கையையும் பாடல்களையும் எவராலும் பிரிக்க முடியாது. தமிழர்களின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்களால் ஆனது. அதனால்தான், தமிழ் சங்க இலக்கியங்கள் பாடல்கள் அழைக்கப்படுகின்றன். கவிதைகளைப் பாடுதல் என்றுதான் புலவர்கள் கூறினார்கள். கவிதைகளை இசையுடன் பாடுவதே மரபாக இருந்தது. ஆனால், புதுக்கவிதை வந்த பிறகு, கவிதை வாசிப்பதாக மாறியது. நவீன கவிதை இன்னும் சிக்கலானதாகிப் போனது.
ஆனால், புதுக்கவிதையானாலும், நவீன கவிதையானாலும் அதிலும் இசை இருக்கிறது. அவற்றையும் இசையுடன் பாட முடியும் என்று எழுத்தாளர் ரவிசுப்பிரமணியம் நிகழ்த்திக் காட்டினார். அதனால், எல்லா கவிதைகளிலும் இசை இருக்கிறது. அதை இசையமைப்பாளர்கள் கண்டுபிடித்து பாடலாக்குகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் திரை இசைப் பாடல்களுக்கு கவித்துவ முகம் கொடுத்த கவிஞர் வைரமுத்து தான் எழுதிய ஒரு பாடலுக்கு இசையமைக்க எம்.எஸ். விஸ்வநாதனிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த பாடல் திரும்பி வந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து, அந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்றது.
கவிஞர் வைரமுத்து தான், ஒரு பாடல் எழுதி, அந்த பாடல் பல இசையமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டு, 12 ஆண்டுகளுகு பிறகு ஏ.ஆர். ரகுமன் இசையமத்து மாபெரும் வெற்றி பெற்றது என்று தெரிவித்துள்ளார். அதை கவிஞர் வைரமுத்துவே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். கவிஞர் வைரமுத்து கூறுகிறார், “நான் ஒரு பாட்டு வைத்திருந்தேன், 12 ஆண்டுகளாக ஒரு பாட்டு வைத்திருந்தேன். எம்.எஸ். விஸ்வநாதனிடம் கொடுத்தேன், திரும்பி வந்தது. சங்கர் கணேஷ் இடம் கொடுத்தேன், திரும்பி வந்தது. ஷியாமுக்கு கொடுத்தேன் திரும்பி வந்தது. ஹம்சலேகாவுக்கு கொடுத்தேன் திரும்பி வந்தது. வட இந்திய இசையமைப்பாளருக்கு கொடுத்தேன் அந்த பாட்டு திரும்பி வந்தது. 12 ஆண்டுகளாக ஒரு பாட்டை எப்படியாவது இசையமைத்துவிட வேண்டும் என்று பையிலே வைத்திருந்தேன். கிடைக்கவில்லை.
ஒருநாள், சுரேஷ் மேனன், அவர் என்ன செய்தார், புதிய முகம் என்ற படத்திற்கு இலக்கிய மோகம், அவசரமாகப் பாட்டு வேண்டும் என்று சொன்னார். அவசரமாகப் பாட்டு வேண்டுமா என்று உடனடியாக பையில் இருந்து ரகுமானிடம் எடுத்துக் கொடுத்தேன். அவர் உடனே 10 நிமிடத்தில் இசையமைத்தார். நான் எழுதிக் கொடுத்து ரகுமான் இசையமைத்த ஒரே பாட்டு. அந்த பாட்டுக்கு ரகுமான் இசையமைத்தார்.
அந்த பாட்டுதான், “கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, அவரைக்கு பூ அழகு, அவருக்கு நான் அழகு” என்று கவிஞர் வைரமுத்து ஒரு மேடை நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.