/indian-express-tamil/media/media_files/2025/09/14/screenshot-2025-09-14-220810-2025-09-14-22-08-31.jpg)
கவிஞர் கண்ணதாசன், தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரை பதித்த பெருமை வாய்ந்த பாடலாசிரியராக திகழ்ந்தார். குறிப்பாக 1950 மற்றும் 1960-களில், அவர் தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியராக பல திரைப்பாடல்களை எழுதியவர். அவரது கவிதைகள் வெறும் வரிகளாக இல்லாமல், அவை மக்களின் இதயங்களில் நேரடியாக பேசும் மொழியாக அமைந்தன. காதலின் நயமிக்க நொடிகளிலிருந்து, வாழ்க்கையின் வலி நிறைந்த தருணங்கள் வரை, தத்துவம், நம்பிக்கை, மகிழ்ச்சி, இழப்பு, தனிமை போன்ற அனைத்துத் தீமைகளை ஆழமாக உணர்ந்து, அவற்றை எளிய வார்த்தைகளில் கவிதையாக வடிக்கத் தெரிந்த ஒரே கவிஞர் என்றால் அது கண்ணதாசனே.
பெரிய பெரிய தத்துவங்களையும், கடினமான இலக்கிய சிந்தனைகளையும் பொதுமக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான மொழியில் அவர் தனது பாடல்களில் பதிவு செய்தார். இதனால்தான், அவரது பாடல்கள் இன்று வரையிலும் காலத்தைக் கடந்தவை எனச் சொல்லப்படுகின்றன. மனதை உலுக்கும் வரிகளும், வாழ்வை வழிநடத்தும் வார்த்தைகளும் கொண்ட கண்ணதாசன் பாடல்கள், தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் நினைவாக உள்ளன.
அதனால்தான் இப்போது கூட கண்ணதாசனின் பாடல் காற்றில் ஒலித்துகொண்டிருக்கிறது. எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட ‘வீடு வரை உறவு… வீதி வரை மனைவி’ பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கண்ணதாசனின் பாடல்கள் உருவான கதைகளில் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது. பல கதைகள் இருக்கிறது.
சிவாஜி, சவுகார் ஜானகி, மனோரமா, சந்திரபாபு, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் நடித்து 1972ம் வருடம் வெளியான திரைப்படம் நீதி. இப்படத்தை சி.வி.ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கான ஒரு பாடலை எம்.எஸ்.வி உருவாக்கி கொண்டிருந்தார். குடித்துவிட்டு போதையில் இருக்கும் கதாநாயகன் தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் இந்த உலகத்தை பற்றியும் பாட வேண்டும். அதேபோல், கடவுளையும் விமர்சிக்க வேண்டும். இதுதான் சூழ்நிலை.
இதற்கு கண்ணதாசனை தவிர வேறு யார் சிறப்பாக பாடல் எழுதமுடியும் என்பதால் அவரை அழைத்திருந்தனர். ஆனால், அவர் வர நேரமானதால் சில டம்மி வார்த்தைகளை போட்டு எம்.எஸ்.வியே அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தார். இன்று முதல் குடிக்கமாட்டேன். சத்தியமடி பொண்ணே.. ராத்திரிக்கு தூங்க வேண்டும் குடிச்சிக்கிறேன் கொஞ்சம்’ என அவர் பாடிக்கொண்டிருந்தர்.
அப்போது உள்ளே நுழைந்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி பாடிய வரிகள் பிடித்து போனது. ‘இதுவே நல்லா இருக்கு மறுபடி பாடு’ என அவரை பாட சொல்லி கேட்டுவிட்டு ‘இதில் கொஞ்சம் மாற்ற வேண்டும். நாளையிலிருந்து குடிக்கமாட்டேன்னுதான் குடிகாரன் எப்பவும் சொல்வான். எனவே ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்.. சத்தியமடி தங்கம்.. ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ இதுதான் பல்லவி என்றார். இப்படித்தான் அந்த பாடல் உருவானது. அதேபோல் அந்த பாடலில் இயக்குனர் கேட்டு கொண்டபடி குடிகாரன் கடவுளை விமரிசிப்பது போலவும் வரிகளை எழுதி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை எம்.எஸ்.வி ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.