/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-123833-1-2025-08-31-12-38-54.jpg)
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒன்றுதான் பாட்டு. இன்பம், துன்பம் என எதுவந்தாலும் உயிரோடு ஒன்றாக கலந்து விட்டது பாட்டு. பாட்டுகள் இல்லாத தமிழ் சினிமாவை எள்ளளவு கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. அப்படி செவிக்கு விருந்தாக அமைந்த பல பாடல்களை கொடுத்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று பெயரெடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1928ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர். இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் புகழ் பெற்று விளங்கியவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் பணம் என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் சுமார் 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இவருடைய பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றன.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் பாடல்கள் என்றால், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. அதேபோல் தனது திரை பயணத்தில் தனது சமகால இசையமைப்பாளர்களை தாண்டி இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் என இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடியிருக்கிறார்.
கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என பல விருதுகளை வாங்கிய எம்எஸ்விக்கு தேசிய விருது கிடைத்ததில்லை என்பது சற்று அதிர்ச்சியான தகவல் தான். இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன், 1998 முதல் 2013 வரை படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 27 ஜூன் 2015 அன்று, விஸ்வநாதன் சென்னையில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் மூச்சுத் திணறால் உயிரிழந்தார்.
இவருடைய ஒரு பழைய நேர்காணல் இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், "மெட்டுக்கு வார்த்தை எழுதினார் வாலி, அப்போது எம்ஜிஆர் வாலி கூப்பிட்டு நான் துன் போட்டிருக்கேன் என்று கேட்டிருக்கிறார். அப்போது வாலி சென்று 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா' என்ற வார்த்தையை காட்டிவிட்டார். அதற்க்கு அவர் பிரமாதமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார். நான் அதற்க்கு பிறகு ஏன் என்னை கேட்காமல் நீ சென்று எம்ஜிஆரிடம் காட்டினாய் என்று வாலியை சத்தம் போட்டேன்.
பிறகு எம்ஜிஆரிடம் சென்று இந்த பல்லவி வேண்டாம் என்று சொன்னேன். அவர் நல்ல தானே இருக்கிறது என்று கூறினார். நான் உடனே, நான் சிவாஜி அவர்களுக்கு 'யாரடா மனிதன் இங்கே' என்று பாடலை எழுதியிருந்தேன் என்று வாலியிடம் கூறினேன். அதற்க்கு எம்ஜிஆர் வந்து இதை பற்றி எந்த கேட்ட பேர் வந்தாலும் என் பெயரை சொல். இது அருமையாக இருக்கிறது என்று கூறினார்." என்று அவர் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.