’உங்க தொழில் வேற’ : வாட்ஸ் ஆப் உரையாடலால் சந்திக்கு வந்த சங்க பிரச்னை

நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, என்பது ரஞ்சனியின் ஆதங்கம்.

நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, என்பது ரஞ்சனியின் ஆதங்கம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Mudhal Mariyathai Ranjani

Actress Mudhal Mariyathai Ranjani

'கடலோரா கவிதைகள்', 'முதல் மரியாதை', 'மண்ணுக்குள் வைரம்', 'முத்துக்கள் மூன்று', 'வெளிச்சம்' உள்ளிட்ட எண்பதுகளின் கிளாசிக் திரைப்படங்களில் நடித்தவர் ரஞ்சனி. சிங்கப்பூரில் பிறந்த இவர் ஒரு வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும் ஆவார். திருமணமாகி கேரளாவில் குடியேறினார். தற்போது ஒரு வாட்ஸ் ஆப் உரையாடல், ரஞ்சனியை வழக்குத் தொடுக்கும் அளவுக்கு துண்டியிருக்கிறது.

Advertisment

பிரதம மந்திரியின் விவசாயிகள் பாதுகாப்பு திட்டம் – அனைத்து விபரங்களும் ஒரே இடத்தில்

நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரை அட்மினாகக் கொண்ட, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாட்ஸ் அப் குழுவில் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல், பெரிய வாக்குவாதமாக மாற, இந்த கொரோனோ பிரச்னைக்கிடையிலும் இது தான் கோலிவுட் ஹாட் டாக்.

SIAA லைஃப் மெம்பர் எனும் அந்த குரூப்பில் விஷால் அணி, ஐசரி கணேஷ் அணி என அனைத்து நடிகர்களும் ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறார்கள். கொரோனா நேரத்தில் தாங்கள் செய்த நிவாரணத்தை ஒரு தரப்பினர் பதிவிட, உங்கள விட நாங்க நிறைய செஞ்சிருக்கோம் என மறு தரப்பினர் அவர்கள் செய்ததை பதிவிட்டிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

ஒரு கட்டத்தில், நாடக நடிகர் வாசுதேவன் என்பவர், தான் நாடகக் கலைஞர்களுக்குச் செய்த உதவிகளைப் பற்றி சில பதிவுகள் போட, நடிகை ரஞ்சனி `யார் இவர்?’ என கேட்டிருக்கிறார். ’ஃபோட்டோ இல்லாததாலும், உண்மையிலேயே அவரைப் பத்தித் தெரியாததாலயும் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்னதுடன், `நல்லா பி.ஆர் வொர்க் பண்றார்’னு வாசுதேவன் குறித்து சொல்லியிருக்கிறார்.

பதிலுக்கு வாசுதேவன் `நாங்க நாடக நடிகர்கள். உங்க தொழில் வேறு’ எனப் பேசிவிட பிரச்னை பெரிதாகிவிட்டது. இரு தரப்புக்கும் தலா 4 பேர் சமாதானம் செய்திருக்கிறார்கள். மனோபாலா, குட்டி பத்மினி போன்ற மூத்த நடிகர்களும் சமாதானம் செய்ய, யாரும் கேட்கும் மனநிலையில் இல்லை. இதனால் கடுப்பான சில நடிகர்கள் உடனே வாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

சக நடிகையை தவறாக பேசுகிறார், ஆனால் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, என்பது ரஞ்சனியின் ஆதங்கம். வாசுதேவன், நடிகர் விஷால் தலைமையிலான கடந்த நிர்வாகத்தில் நியமன செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்றால், நடிகை ரஞ்சனி ஐசரி கணேஷ் அணி சார்பாகப் போட்டியிட்டவர்.

இது குறித்து முன்னணி ஊடகத்திடம் பேசிய வாசுதேவன், `பாண்டவர் அணி’ போட்டியிட்ட முதல் தேர்தல்ல நானும் நடிகை ரஞ்சனியும் சேர்ந்தே கூட தேர்தல் வேலைலாம் பண்ணியிருக்கோம். அப்படியிருக்கிற சூழல்ல, எங்க மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வாங்கறதுக்கு நான் எடுத்த சில முயற்சிகள் பத்தி வாட்ஸ் அப் குழுல போட்டேன்.

லாக்டவுனில் “வீட்டில் தோட்டம் வைக்க” ரெடியா? பொதுமக்களுக்கு சவால்விடும் எஸ்.பி.!

அப்ப அவங்க தான் முதல்ல `நீங்க யாரு, நீங்கெல்லாம் நடிகரா?’னு என்னைக் கேட்டாங்க. அது எனக்குக் கோபத்தை உண்டாக்குச்சு. `சங்கத்தின் குரூப்ல எப்படி வெளியாள் ஒருத்தர் இருக்க முடியும். இது கூட உங்களுக்குத் தெரியலையா?’னு கேட்டேன். எங்க தொழில் நாடகம். உங்க தொழில் சினிமா ரெண்டும் வேற வேறன்ற அர்த்தத்துல தான் மெசேஜ் போட்டேன். உடனே, தப்பாப் பேசிட்ட, மன்னிப்புக் கேளு இல்லாட்டி வழக்கு போடுவேன்கிறாங்க. நான் உள்நோக்கத்தோடு எதையும் பேசலை’ என்றவர் திருவண்ணாமலை காவல் நிலையத்திலும், ரஞ்சனி குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: