முதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor vijay in mudhalvan 2, முதல்வன் 2

actor vijay in mudhalvan 2, முதல்வன் 2

முதல்வன் 2 படம் எடுத்தால் இயக்குநர் சங்கரின் தேர்வு ரஜினிகாந்த், கமல் இவர்களில் யார் என்று கேட்டதற்கு இருவர் இல்லையென்றால் விஜய் வைத்து எடுப்பேன் எனக் கூறியிருக்கிறார் சங்கர்.

Advertisment

சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக நடித்த படம் முதல்வன். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அர்ஜுன், மனிஷா கொய்ரா, மணிவண்ணன், ரகுவரன், வடிவேலு, விஜயக்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் அறிமுகமான ஒரு நாள் முதல்வர் என்ற ஐடியா இன்றளவும் பேசப்படும் காட்சி.

முதல்வன் 2 படத்தில் விஜய் ?

 

Advertisment
Advertisements

முதலில் இந்த படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்களிடம் கேட்கப்பட்டு பின்னர் அர்ஜுன் ஒப்பந்தமானார். இந்நிலையில், தமிழில் வெற்றிகரமாக பல நாட்கள் ஓடிய பல படங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. சங்கரின் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0 கடந்த மாதம் வெளியானது.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். கடந்த மாதம் இந்த பேட்டி வெளிவந்திருந்தாலும், இது இப்போதே திடீரென டிரெண்டாகி வருகிறது. இந்த பேட்டியில் முதல்வன் 2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று பதில் அளித்தார்.

சங்கரின் இந்த பதில் ரஜினி, கமல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருந்தாலும், விஜய் ரசிகர்கள் செம்ம ஹாப்பி அன்னாச்சி.

Tamil Cinema Actor Vijay Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: