முகேஷ் அம்பானி, விஜய் டிவி சீரியல் பார்க்கிறாரா? சொல்லவே இல்ல..!
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலை தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள இந்தியாவின் முதல் பணக்காரரர் முகேஷ் அம்பானி மீம்ஸ்தான் நெட்டிசன்கள் மத்தியில் இப்போது டாப்-ஆக உள்ளது.
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலை தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள இந்தியாவின் முதல் பணக்காரரர் முகேஷ் அம்பானி மீம்ஸ்தான் நெட்டிசன்கள் மத்தியில் இப்போது டாப்-ஆக உள்ளது.
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் ஒரு சீரியலைப் பற்றி மீம்ஸ் வெளியாகிறது என்றாலே அது மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்று அர்த்தம். அந்த வகையில் விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலை தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள இந்தியாவின் முதல் பணக்காரரர் முகேஷ் அம்பானி மீம்ஸ்தான் நெட்டிசன்கள் மத்தியில் இப்போது டாப்-ஆக உள்ளது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தமிழ் டிவி சேனல்களில் சீரியல்களில் டாப் 5 வரிசைக்கு முன்னேறியுள்ளது. வளர்ந்த 2 பிள்ளைகள் மற்றும் 1 மகளுக்கு தாயாக மத்திய வயதில் இருக்கும் பாக்கியலட்சுமி குடும்பம்தான் தனது உலகம் என்று இருக்கிறாள். ஆனால், கணவன் கோபி மனைவி பாக்கியலட்சுமியை அலட்சியம் செய்துவிட்டு முன்னாள் காதலியைத் தேடிச் செல்கிறான். மனைவியை பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக சித்தரிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவின் முதல் பணக்காரர் மட்டுமல்ல ஆசியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி அவரது மனைவியைப் பார்த்து பல்லைக் கடிக்கும் புகைபடத்தை பாக்யலட்சுமி சீரியல் உடன் தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். முகேஷ் அம்பானி மீம்ஸ் அம்பானி புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதையடுத்து, பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் சதீஷ், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் முகேஷ் அம்பானியின் எக்ஸ்பிரஷன் தான் பாக்யலட்சுமி சீரியலில் செய்யும் எக்ஸ்பிரஷன் போல உள்ளது. தன்னோட எக்ஸ்பிரஷனை முகேஷ் அம்பானி காப்பி அடித்துவிட்டதாக ஜாலியாக அந்த மீம்மை பகிர்ந்துள்ளார்.
முகேஷ் அம்பானி அவரது மனைவியைப் பார்த்து பல்லைக் கடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சதீஷ், “ஐயோ என்னோட expressionஐ சுட்டுட்டானே. முகேஷ் நீயும் எங்க சீரியல் பாக்றியா, சொல்லவே இல்லை… ஐயோ ஐயோ" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ள முகேஷ் அம்பானி மீம்ஸ் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த மீம்ஸைப் பார்க்கும் நெட்டிசன்கள் ‘என்னது பாக்யலட்சுமி சீரியலை முகேஷ் அம்பானி பார்க்கிறாரா? சொல்லவே இல்ல” என்று ஜாலியாக கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"